mushroom gravy 29 1472474412
சைவம்

சிம்பிளான… காளான் கிரேவி

உங்களுக்கு அசைவம் சாப்பிட பிடிக்கவில்லையா? ஆனால் அசைவ உணவின் சுவையை ருசிக்க விருப்பமா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக காளானை கிரேவி செய்து சுவையுங்கள்.

உங்களுக்கு எளிய முறையில் காளான் கிரேவியை செய்யத் தெரியுமா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காளான் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: காளான் – 1 பாக்கெட் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்

அரைப்பதற்கு… வெங்காயம் – 1 தக்காளி – 2 பட்டை – 1 இன்ச் துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் – 1 கிராம்பு – 2 சீரகம் – 1 டீஸ்பூன் சோம்பு – 2 சிட்டிகை கொத்தமல்லி – சிறிது

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி குளிர வைத்து, மிப்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டூ பேஸ்ட் சேர்த்து வதக்கி, காளானையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காளான் கிரேவி ரெடி!!!

mushroom gravy 29 1472474412

Related posts

கத்தரிக்காய் புளிக்கூட்டு

nathan

சுவையான பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan

சுவையான உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி

nathan

காளான் டிக்கா

nathan

சுவையான சத்தான வெண்டைக்காய் பொரியல்

nathan

மிளகு மோர்க்குழம்பு

nathan

வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்

nathan

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

nathan

சுவையான… பீட்ரூட் பொரியல்

nathan