அழகு குறிப்புகள்ஆண்களுக்குமுகப்பரு

முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு என்னென்னமோ செய்து களைத்து விட்டீர்களா..? அப்போ கட்டாயம் இத படிங்க!….

இன்று பலரின் முக அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு இந்த பருக்களுக்கு உள்ளது. முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் நம்மால் எந்த வேலையையும் கவனமாக செய்ய இயலாது. முகத்தை பற்றியே நாம் மிகவும் கவலை கொண்டு யோசிப்போம்.

சிலர் தனது அலுவலகத்திலும் இதனால் பல்வேறு பாதிப்புகளை பெற்றுள்ளார். முகத்தில் உள்ள பருக்களை உடனே போக்குவதற்கு என்னென்னமோ செய்து களைத்து விட்டீர்களா..?
boy pemple

யாருக்கு பிரச்சினை..? பருக்கள் இருந்தால் யாராக இருந்தாலும், அதன் மீது தான் கவனம் செல்ல தொடங்கும். சிலர் மட்டுமே இதனை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். பெரும்பாலும், இப்போதெல்லாம் ஆண்களுக்கே இது அதிகம் வருவதாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் ஆண்கள் முகத்தை பராமரிக்காமல் இருத்தலே.

பருக்கள் ஏன் வருகிறது..? முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், அதிகமான எண்ணெய் உணவுகள், ஹார்மோன்களின் மாற்றம், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம்… இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதனால், முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்து பருக்களை வரவழைக்கிறது.

டிப்ஸ் #1 முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு இந்த டிப்ஸ் #1 சிறந்த முறையில் உங்களுக்கு உதவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்வது நல்லது. தேவையானவை :- துளசி 10 இலைகள் வேப்பிலை கொழுந்து 7 இலைகள் சந்தனம் 2 டீஸ்பூன் பன்னீர் சிறிது

செய்முறை :- முதலில் துளசி மற்றும் வேப்பிலையை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் சந்தனம், மற்றும் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் உடனே மறைந்து போகும்.

டிப்ஸ் #2 ஆண்களின் முகத்தில் உள்ள எண்ணெய் பசைகளை நீக்கினால் பருக்களை தடுத்து விடலாம். இதற்கு தேவையானவை… துளசி 10 இலைகள் முல்தானி மட்டி 1 ஸ்பூன் பன்னீர் சிறிது

செய்முறை :- முதலில் துளசி இலையை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் முல்தானி மட்டி மற்றும் பன்னீர் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் நன்கு பூசி 15 நிமிடம் காய விடவும். பிறகு இதனை குளிர்ந்த நீரில் கழிவு விடவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தாலே எண்ணெய் பசை சருமம் மாறி விடும்.

பருக்களின் தழும்புகள் மறைய… பருக்கள் வந்த பிறகு அதனால் ஏற்பட்ட தழும்புகள் இருந்து கொண்டு நமது முக அழகை சேதப்படுத்தும். இதனை சரி செய்ய, தேவையானவை :- ஆரஞ்ச் தோல் துளசி 10 இலைகள் பால் அல்லது பன்னீர் சிறிது

செய்முறை :- ஆரஞ்சு பழத்தின் தோலை அப்படியே தூக்கி போடாமல், அதனை மிதமான வெயிலில் உலர்த்தி, தோல் காய்ந்த பின்பு எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனை பொடி போன்று நன்றாக அரைத்து கொள்ளவும். பின் துளசியையும் மைய அரைத்து கொண்டு, இவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக பால் அல்லது பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால் பருக்களின் தழும்புகள் மறைந்து போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button