ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறதா?…..

எவ்வளவு தான் நீங்கள் தினமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட, சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறது. அதை எப்படி தான் சரிசெய்வது என்பதே நமக்குப் புரியாது.

அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அப்படி வீட்டில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் எளிமையான வழிகளைப் பற்றி இங்கே விளக்கமாகக் காண்போம்.

kitchen decoration and furniture setting

காரணங்கள்

வீட்டின் மூலை முடுக்குகளில் இருந்து துர்நாற்றங்கள் ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டில் வரும் துர்நாற்றத்துக்கும் கீழ்கண்டவற்றில் ஏதோவொன்று தான் காரணமாக இருக்க முடியும். அவை,

காற்றோட்டம் குறைவாக இருத்தல்

வானிலை மாற்றங்கள்

வீட்டின் பழமை

பாக்டீரியா

தூசி படிதல்

உணவுகள் கெட்டுப்போதல்

ஈரம் இருந்துகொண்டே இருத்தல்

ஆகிய ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் வீட்டில் துர்நாற்றம் வீசும். இதை வீட்டிலுள்ள சின்ன சின்ன பொருள்களைக் கொண்டே எப்படி சரிசெய்யலாம்.

வெனிலா எசன்ஸ்

சில துளிகள் வெனிலா எசன்ஸை எடுத்து சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். அதை துணியில் நனைத்து வீட்டில் உள்ள மர ஃபர்னிச்சர்கள், பல்புகள் ஆகியவற்றைத் துடையுங்கள். அப்படி செய்தால் அதில் துர்நாற்றங்கள் போய், பல்பு ஆன் செய்யும் போது வெனிலா பிளேவர் வாசனை கமகமக்கும்.

காபி

காபியும் மிகச்சிறந்த வாசனை தரக்கூடிய டியோடரைசராகப் பயன்படுத்தலாம். ஒரு கப்பில் சிறிதளவு காபி பொடியைப் போட்டு கிச்சனில் ஒரு மூலையில் வைத்துவிடுங்கள். கிச்சனில் உள்ள துர்நாற்றங்களை முழுக்க போக்கி, அறை முழுவதும் காபியின் நறுமணம் கமழ ஆரம்பித்துவிடும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களுக்கென்றே அலாதியான மணம் உண்டு. அதனால் தான் பெரும்பாலும் ரூம் ஃபிரஷ்னர்கள் கூட சிட்ரஸ் பிளேவர்களில் வாங்குகிறோம். வீட்டில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழங்களை பயன்படுத்திவிட்டு, தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி வீசாதீர்கள். அந்த தோலை லேசாக உலரவிட்டு, பின் அதை தீயில் போட்டு ஒரு இடத்திலோ அல்லது சாம்பிராணி புகை போடுவது போலவோ வீடு முழுக்கக் காட்டுங்கள். வீடு கமகமவென மணக்கும்.

உப்பு

கெட்ட துர்நாற்றங்களை போக்கும் அதிக ஆற்றல் கொண்டது தான் உப்பு. நீங்கள் எந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டுமோ, குறிப்பாக, பிசுபிசுவென்று இருக்கிற இடமாக இருந்தால் அந்த இடத்தில் அரை கப் அளவுக்கு உப்பை கொட்டி விடுங்கள். பின் குளிர்ந்த நீர் தெளித்து, நன்கு தேய்த்து சுத்தம் செய்யுங்கள். பிசுபிசுப்பும் போய்விடும். இந்த இடமும் பளி்ச்சென்று மாறிவிடும்.

ஒயிட் வினிகர்

கிச்சனில் ஏற்படுகிற துர்நுாற்றத்தைப் போக்குவதில் ஒயிட் வினிகருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, மீன் சமைத்தால் அந்த வாசனை வீட்டை விட்டு போவதற்குள் படாத பாடு படவேண்டியிருக்கும். இனிமேல் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு ஒயிட் வினிகரை ஊற்றி அடுப்பில் வைத்து மெல்லிய தீயில் வைத்து சூடேற்றுங்கள். அது சூடேற சூடேற வீட்டைச் சுற்றிய மீன் வாசனை காணாமல் போய்விடும்.

எலுமிச்சையும் கிராம்பும்

கிச்சனில் கருகிய தீய்ந்து போன வாசனை ஏதேனும் வந்தால் எரிச்சலாக இருக்கிறதா? கவலைப்படாதீங்க. ஒரு கப் தண்ணீரில் 3 வட்டமாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகளையும் அதோடு சில கிராம்புகளையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். அது கொதிக்க கொதிக்க அறையைச் சுற்றி வந்த தீய்ந்து போன வாசனை காணாமல் போய்விடும்.

இது பூண்டு மற்றும் வெங்காயத்தின் நாற்றத்தையும் நீக்கிவிடும்.

தைம், ரோஸ்மேரி

சூடான கொதிக்கும் தண்ணீர், நெருப்பு என ஏதேனும் சூடான இடத்தில் இந்த தைம் மற்றும் ரோஸ்மேரி இலைகளை பச்சையாகவும் உலர்த்தியதாகவோ இருப்பதைப் போட்டால், அதிலிருந்து வெளியேறும் வாசனை வீடு முழுக்க பரவும்.

பட்டை

மீனின் வாசனையை வீட்டிலிருந்து போக்குவதற்கான மற்றொரு ஈஸியாக பொருள் பட்டை. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் பட்டையை அப்படியே உடைத்தோ அல்லது பொடியாகவோ போட்டு கொதிக்க விடுங்கள். மீன் வாசனை ஓடிவிடும்.

பிளீச்சிங்

அரை கப் அளவுக்கு பிளீச்சிங் பவுடரையோ லிக்வியூடையோ குளிர்நு்த நீரில் கலந்து கிச்சினில் உள்ள சிங்கில் ஓட்டைகளை அடைத்துவிட்டு ஊற்றி விடுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டுவிட்டு பின் தேய்த்து கழுவுங்கள். சிங் பளிச்சென மாறிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button