இந்த குறிப்பு மிருதுவான மின்னும் பொலிவை தரும்.

முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால், பலவித சரும பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும்.

பிறகு இதனை சரி செய்ய நாம் பலவித கிரீம்களையும், சோப்புகளையும் பயன்படுத்துவோம். இது நமது சருமத்திற்கு பாதிப்பை அதிகரிக்குமே தவிர, தீர்வை தராது.

ஆனால், நம் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் இந்த பிரச்சினையை நம்மால் தீர்வுக்கு கொண்டு வர இயலும்.

வாங்க, வெள்ளரிக்காயை வைத்து எப்படி எண்ணெய் வடிதலை தடுப்பது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

ஏன் இப்படி..?

எண்ணெய் வடிவத்திற்கு சில முக்கிய காரணிகளை கூறலாம். முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், சுற்றுசூழல் காரணத்தால், எண்ணெய் உணவுகள், அதிக மன அழுத்தம்…

இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிடும்.

டிப்ஸ் #1

முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவத்தை தடுக்க இந்த வெள்ளரிக்காய் டிப்ஸ் உங்களுக்கு உதவும்.

இதனை தயாரிக்க தேவையானவை… மஞ்சள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு 1/2 கப்

செய்முறை :-

முதலில் வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி கொள்ளவும்.

15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 மறை செய்து வந்தால் எண்ணெய் வடிதல் நின்று விடும்.

வெள்ளரிக்காயும் யோகர்டும்…

முகத்தின் எண்ணெய் வடிதல் பிரச்சினைக்கு இவை இரண்டும் தீர்வு தருகிறதாம். அதற்கு 1/2 கப் வெள்ளரிக்காயை எடுத்து கொண்டு, 1 ஸ்பூன் யோகர்டுடன் சேர்த்த்து அரைத்து கொள்ளவும்.

பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு மிக விரைவில் நல்ல பலன் தரும்.

முகம் பொலிவு பெற

எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தவும், பொலிவாக இருக்கவும் கால் பங்கு வெள்ளரிக்காய், பாதி பழுத்த தக்காளி ஆகிய இரண்டையும் ஒன்றாக அரைத்து முகத்தில் தடவவும்.

பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு மிருதுவான மின்னும் பொலிவை தரும்.

3 கலவை முகத்தை எண்ணெய் வடியாமல் காக்க இந்த் டிப்ஸ் உதவும். இதற்கு தேவையானவை…

முல்தானி மட்டி 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு 2 ஸ்பூன் பன்னீர் 1 ஸ்பூன்

செய்முறை :-

வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் முல்தானி மட்டி, பன்னீர் சேர்த்து முகத்தில் பூசவும்.

20 நிமிடம் சென்று முகத்தை வெது வெதுப்பான நீரிலும் கழுவலாம். இது எண்ணெய் வடித்தலை நிறுத்தி விடும்.

எலுமிச்சையும் வெள்ளரிக்காயும்

1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றையும் சேர்த்து முகத்தில் தடவவும்.

15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இந்த் குறிப்பு முகத்தை எண்ணெய் பிசையில்லாமல் வைத்து கொள்ளலாம்.

எலுமிச்சையும் வெள்ளரிக்காயும்

1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றையும் சேர்த்து முகத்தில் தடவவும்.

15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இந்த் குறிப்பு முகத்தை எண்ணெய் பிசையில்லாமல் வைத்து கொள்ளலாம்.

Leave a Reply