ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சிகரெட்டிற்கு இணையானதாகக் கூறப்படுகிறது நாம் அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள்!….

பொதுவாக இந்தியாவில் (இந்தியர்கள் வழிபடுகின்ற) உள்ள எல்லா கோவில்களிலுமே பயன்படுத்தப்படுகின்ற முக்கியமான பூஜை பொருள்களில் ஒன்றாக இருப்பது தான் ஊதுபத்தி. இந்த ஊதுபத்தி பொதுவுாக நம் எல்லோருடைய வீடுகளிலுமே இருக்கக்கூடியது தான்.

இது இன்றி பூஜையும் நிறைவு பெறுவதில்லை. ஆனால் இதிலிருந்து வெளிவருகின்ற புகையினாலும் நறுமணத்தாலும் பல்வேறு தீங்குகள் விளைவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் மிக விரிவாகக் காணலாம்.

sekaret

சிகரெட்டுக்கு இணை

ஊதுபத்தியினுடைய புகையினால் சிலர் சுவாசிக்க மிகவும் சிரமப்படுவதைப் பார்த்திருப்போம். அதிகமாக இருமல் உண்டாகும். இந்த புகையானது சிகரெட்டின் புகைக்கு இணையானதாகக் கூறப்படுகிறது.

புகைப்பிடித்தலுக்கு இணை

ஊதுபத்தியினுடைய புகையானது சிகரெட் புகைக்கு இணையானது என்று கூறப்படுகிறது. அந்த புகைப்பழக்கம் நம்முடைய நுரையீரலை பாதிப்படையச் செய்யும் என்பது நமக்குத் தெரியும்.

அதேபோலத் தான் இந்த ஊதுபத்திய்ன் புகையும் அற்த அளவிற்கு நம்முடைய நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோய்

இந்த ஊதுபத்தி புகையின் மூலம் உண்டாகும் இருமல், மூச்சுத் திணறலை அடுத்து அது நுரையீரல் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பும் அதிகமாகிவிடுகிறது.

ஊதுபத்தியில் இருந்து வெளிவரும் புகையானது நுரையீரலுக்கு நேரடியாகச் சென்று சேர்கிறது. அதனால் தான் அளவுக்கு அதிகமாக ஊதுபத்தியின் புகையை சுவாசிக்க நேர்கிற பொழுது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊதுபத்தி புகை வரும் பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது. முடிந்தவரையிலும் ஊதுபத்தியை அவர்கள் உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது.

அந்த புகையைக் குழந்தையினுடைய வயிற்றில் இருக்கின்ற பொழுது, அந்த புகையை சுவாசிப்பதால் பிறக்கும் குழந்தைக்கு லுக்கேமியா என்னும் நோய் உண்டாக அதிக வாய்ப்புள்ளது.

இதய நோய்கள்

தொடர்ந்து அதிக அளவிலான ஊதுபத்தி புகையினை சுவாசிப்பவர்களில் சுமார் 12 சதவீதத்துக்கும் மேல் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் 19 சதவீதம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நரம்பு மண்டலம்

பொதுவாக வீடுகளில் மாலை நேரங்களில் ஊதுபத்தி கொளுத்தி வைப்பது வழக்கம். ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். பகல் நேரத்தை விடவும் இரவு நேரத்தில் நமக்குக் கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு கனிசமாகக் குறைய ஆரம்பிக்கும்.

அந்த சமயத்தில் நாம் இந்த ஊதுபத்தியை உபயோகப்படுத்தினால் அது வீட்டுக்குள் குறைந்தது 2 மணி நேரமாவது வாசனையும் புகையும் உலாவிக் கொண்டிருக்கும்.

இதனால் வீட்டுக்குள் அதிக அளவில் கார்பன் மோனாக்சைடை நாம் சுவாசிக்க வேண்டியிருக்கிறது.

இதனால் நம்முடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஞாபகத் திறன் குறைபாடு மற்றும் கவனச் சிதறல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

ஆஸ்துமா

புகை மற்றும் காசு மாசுபட்டிருப்பது தான் ஆஸ்துமா உண்டாவதற்கான மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த புகையால் நுரையீரலில் உள்ள செல்களில் வீக்கங்கள் உண்டாவதால் அது ஆஸ்துமாவாக மாறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button