உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

உங்கள் உடலில் இருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் மற்றவர்கள் முன்னிலையில் மிகவும் சங்கடமான நிலையை உருவாக்கி விடுகிறது.

நன்றாக குளித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டாலும் சில காரணங்களினால் உடல் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

உடல் வியர்ப்பதைப் பொறுத்து உடலின் ஏற்படும் துர்நாற்றத்திலும் மாற்றம் ஏற்படும்.

உங்கள் உடலில் துர்நாற்றம் ஏற்பட்டால் கவலையைத் தவிர்த்து இந்த இலகுவான முறைகளைக் கையாளுங்கள்.

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்.

1. உணவு முறை.

நாம் சாப்பிடும் உணவுகளாலும் தவிர்க்கும் உணவு வகைகளும் உடல் துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. பூண்டு, வெங்காயம் வியர்வையுடன் கலந்து விடுவதனால் கடுமையான நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

காபின் உடலில் நாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய பங்கை வகிக்கிறது.

சாப்பிட்ட உடன் ஒரு துளி புதினா எண்ணெய்யை நாக்கில் தடவுவதனால் உடலில் இருந்து தேவையற்றவை வியர்வை மூலம் இலகுவாக வெளியேறி விடும்.

2. முடி அகற்றுதல்.

அக்குள் பகுதிகளில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதனால் துர்நாற்றம் விலகும்.

இதில் அதிகம் முடி இருப்பதனால் ஈரலிப்பாக வைத்திருப்பதுடன் பக்டீரியாக்களை வளரச் செய்கின்றது. முடிகளை அகற்றுவதனால் தொற்றுக்கள் நீங்கி துர்நாற்றம் அகன்று விடும்.

3. ஹைட்ரஜன் பெராக்சைடு.

உடல் துர்நாற்றத்திற்கு உரிய காரணம் வியர்வையில் உள்ள பக்டீரியாக்களே, இவற்றை அகற்றுவதற்கு ஹைட்ரஜன் பெராக்சைட்டினை நீரில் கலந்து பயன்படுத்தலாம்.

ஒரு தேக்கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடினை ஒரு கப் நீரில் கலந்து அக்குள் பகுதிகலை சுத்தம் செய்வதனால் துர்நாற்றம் நீங்கும்.

4. எலுமிச்சப்பழச் சாறு.

அலுமிச்சப்பழச் சாறு அமிலத் தன்மை கொண்டதனால் பக்டீரியாக்களை இலகுவாக அழித்து விடும். இதனால் துர்நாற்றம் இலகுவாக நீங்கும் ஆனால் சருமத்தில் இலேசான எரிச்சல் ஏற்படலாம்.

5. சமையல் சோடா.

சமையல் சோடா வியர்வையையும் துர்நாற்றத்தையும் உறிஞ்சி எடுக்கும் தன்மை கொண்டுள்ளது.

6. Antiperspirant.

தினமும் குளித்ததிற்கு பிறகும், இரவு தூங்குவதற்கும் முன்பும் antiperspirant பயன்படுத்துவதனால் உடல் துர்நாற்றத்தை நீக்க முடியும்.

7. ஆடைகள்.

இயற்கையான நார்ப்பொருட்களில் தயார்க்கும் ஆடைகள் வியர்வைக்கும், நாற்றத்திற்கும் எதிராக செயற்படும். பக்டீரியா தொற்றுக்கள் அதிகரிக்காமல் தடுக்கும்.

8. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்.

மன அழுத்தம் அதிகமாவதால் வியர்க்கும் தன்மை அதிகமாகி துர்நாற்றம் அதிகமாகும்.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு யோகா, தியானம், உடற்பயிற்சி சிறந்த முறையில் உதவுகிறது. உடல் ஆறுதல் அடைவதனால் துர்நாற்றத்தைக் குறைக்க முடியும்.

Leave a Reply