கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

நேரான முடியை பெறவேண்டுமா?

சுருட்டை முடியை விரும்பாதவர்கள், முடியை நேராக்க அழகு நிலையங்களுக்குச்சென்று முடியை நேராக மாற்றுகிறார்கள். அப்படி அங்கு செல்லும் பலருக்கு முடி அதிகமாக உதிர ஆரம்பிப்பதுடன் மென்மைத்தன்மையையும் இழக்கிறது. அப்படி முடி உதிர்ந்து, மென்மை இழந்து நேராக்கும் முடியை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாக, மென்மையாக மாற்றலாம்.

தலைக்கு குளிப்பதற்கு முன் தயிரை முடி மற்றும் மயிர் கால்களில் நன்கு படும் படி தடவ வேண்டும். பிறகு 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இதனால் முடியானது நேராகவும், மென்மையாகவும் இருக்கும். மேலும் பொடுகு இருப்பவர்கள், அந்த தயிருடன் சிறிது எலுமிச்சைப்பழ சாற்றை விட்டு தடவினால் பொடுகு போய்விடும்.

வாரத்திற்கு ஒரு முறை ஆயில் மசாஜ் செய்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஆயில் மசாஜை தேங்காய் அல்லது நல்லெண்ணெய்யில் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் எண்ணெய்யை சூடு படுத்தி செய்தால் அதைவிட நல்லது. நன்கு எண்ணெய் ஊறியதும் சாதாரண நீரில் அலசினால் முடி பட்டுப் போல் மிளிரும்.

முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொண்டு அத்துடன் நல்லெண்ணெய்யை ஊற்றி, அதை முடிகளுக்கு தடவி 20 30 நிமிடம் ஊறவிடவும். பின் ஷாம்பு கொண்டு அலசினால் முடியானது மென்மையாக பட்டுப்போல் காணப்படும்..

அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை நேராக மாற்றியப் பின் முடி பார்க்க வறண்டு காணப்படும். தலைமுடியை அலசியப் பிறகு, ஒரு மக் தண்ணீரில் சிறிது விளிகர் விட்டு, அந்த தண்ணீரால் முடியை அலசி, பின் சுத்தமான தண்ணீரால் அலசினால் முடி நன்கு மிளிரும்.

தேயிலையும் முடிக்குச்சிறந்த ஒரு நல்ல கண்டிஸ்னர் மற்றும் நிறம் தரக்கூடியவை. சிறிது தேயிலையை தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, ஆறிய பின் முடியில் தடவவும். பிறகு 15-20 நிமிடம் கழித்து அலசவும். இதனால் முடியானது நேராகவும் கொஞ்சம் கலராகவும் இருக்கும்.

o STRAIGHT HAIR facebook
Portrait of young attractive woman

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button