மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! ’எடீமா’ எனும் கால் வீக்கத்தால் அவதியா?

உடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் ’எடீமா’ என்று சொல்லப்படுகிறது.

சில சமயங்களில் வீக்கம் தன்னால் மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.

எடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும். இருப்பினும், அடிவயிறு அல்லது முகத்தில் கூட எடீமா பாதிக்கக்கூடும். பிரசவம், பாதம் அல்லது கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் கூட வீக்கம் ஏற்படும்.

கர்ப்பிணிகள் காலில் வீக்கம் ஏற்பட்டால் தவறாது மருத்துவரை பார்ப்பது நல்லது. வீக்கத்துடன் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியவை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கால்களில் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்

தண்ணீர்

திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் கட்டுக்குள் வரும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படும்.

ஐஸ் பேக், பேண்டேஜ்

காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம். கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.

கால் உயர்த்தி வைத்தல்

உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைத்துக் கொள்ளலாம்.

இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.

மது அருந்தக் கூடாது

மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கிறது. மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கல்லுப்பு

வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலிகள் குறைந்து போகும்.

எலுமிச்சை ஜூஸ்

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வரலாம்.

மக்னீசியம்

உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.

உப்பை குறைக்கவும்

உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைத்து விடலாம்.

பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கால் மசாஜ்

கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் செய்ய வேண்டும்.

தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்க வேண்டும்.

பொட்டாசியம்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button