ஆண்களுக்கு

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ் ! நீங்களும் முயற்சி செய்யுங்கள் ………..

வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லனும்.

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து விய‌ர்வையுட‌ன் உள்ள‌ ச‌ட்டையை எடுத்து அப்ப‌டியே பீரோவில் மாட்டாதீர்க‌ள். அது அப்ப‌டியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்த‌தும் அதை ம‌றுப‌டி ம‌றுநாள் ஆபிஸுக்கு போட்டு செல்லாதீர்க‌ள்/
ப‌ய‌ங்க‌ர‌ க‌ப் அடிக்கும் ஆனால் அது உங்க‌ளுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவ‌தால், எதிரில் நிற்ப‌வ‌ர்க‌ளுக்கு அல்ல‌து, நீங்க‌ள் ச‌ரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் க‌ண்டிப்பாக‌ ஸ்மெல் வ‌ரும்.ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிர‌ம‌ம் பார்க்காம‌ல் துவைத்து ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து ந‌ல்ல‌து.

அடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள் , இல்லை என்றால் பியுட்டி பின்க் பான்ஸே போதுமானது.

த‌லையில் (cap)கேப்போ, ச‌ன் கிளாஸோ அணிந்து கொள்ள‌லாம்.
அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும்.ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அன்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரட்க்ஷனும் கூட அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம்.அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதிங்க முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுஙக்ள்.இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.

வெயில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் “ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்” அது நிறைய பேருகு சிரிப்பு வரும். ஏன் சொல்கீறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தனிகிறது.தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்ற்கும் நல்லது.

எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவ‌தும் எண்ணையாக்கிடாதீங்க‌. அடுத்து நுழைப‌வ‌ரை விழ‌ வைத்து ம‌ண்டைய‌ பிள‌ந்துடாதீங்க‌.

துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.

வெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள்.100% காட்டனே உபயோகப்படுத்துங்க.
கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்ப குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.

நிறைய‌ பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், ம‌ற்றும் மூக்கிலிருந்து இர‌த்த‌ம் வ‌ர‌லாம்.

அத‌ற்கு, அடிக்க‌டி த‌யிர் சாத‌ம் சாப்பிட‌லாம்.இல்லை ல‌ஸ்ஸி அடித்து வ‌கையா, மேங்கோ ல‌ஸ்ஸி, பைனாப்பிள் ல‌ஸ்ஸி, ஆர‌ஞ்சு ல‌ஸ்ஸி என‌ குடிக்க‌லாம்.

அதே போல் நீராகார‌ம் நிறைய‌ சாப்பிடுவது ந‌ல்ல‌து.தின‌ம் மோர் குடிப்ப‌தை ” பீர் இல்ல‌” ப‌ழ‌க்க‌த்தில் வைத்து கொள்ளுங்க‌ள்., ஜூஸ் வ‌கைக்க‌ள், ப‌ழ‌ங்க‌ள் இது போல் வெயில் கால‌ங்க‌ளில் நிறைய‌ சாப்பிடுவது ந‌ல்ல‌து.

த‌ண்ணீர் நிறைய‌ குடிங்க‌ள், முடிந்தால் இள‌ நீர், த‌ர்பூச‌னி, மாதுளை போன்ற‌ ப‌ழ‌ங்க‌ள் சாப்பிட‌லாம்.இவையெல்லாம் சாப்பிடுவ‌தால் கொப்புள‌ங்க‌ள், வேன‌ல் க‌ட்டிக‌ள் வ‌ராம‌ல் பாதுகாத்து கொள்ள‌லாம்.

பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்
1. கேரட்,குகும்பர், வெங்காயம், தக்காளி, இவைக்ளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம் ஈசியன சாலட் உடனடி சாலட்.
2. அல்லது மாங்காய் சாலட் ஏற்கனவே குறிப்பில் கொடுத்து இருக்கேன்.
3.மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்/
4. இதே போல் கொண்டைகடலையிலும் செய்யலாம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button