மருத்துவ குறிப்பு

உங்களுக்குதான் இந்த விஷயம்! அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாம்!

நீங்கள் அடிக்கடி டாய்லெட்டை உபயோகிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இருந்தாலோ அல்லது சமீபத்தில் உங்கள் துணைவருடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டிருந்தாலோ இது ஒரு அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது கருவுற்றலின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது பெரும்பாலும் கருவுற்றல் நிகழ்விலிருந்து ஒரு வாரத்திற்குள் நிகழும்.

உங்களுடைய சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் சரி. உங்களால் சிறு சிறு அளவில் தான் சிறுநீர் கழிக்க முடியும். இது உங்களுக்கு வெறுப்பூட்டத்தக்கதாக இருக்கலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இது உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் தொடர்வதோடு, குழந்தைப் பிறப்பிற்கு சற்று முன் தான் சரியாகும். இது மட்டுமின்றி, வழக்கத்திற்கு மாறான வெளிப்போக்கு ஆகியவையும் கருவுற்றலை உறுதி செய்யும் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

இது ஏன் நிகழ்கிறது?

கருவுறுதலின் போது பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவும் சேர்ந்து ஒரு கருவை உருவாக்கி கருப்பை சுவற்றிற்குள் நுழைந்து HCG எனப்படும் ஒருவித ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடலில் குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் அதிகப்படியான ரத்த ஓட்டத்திற்கும் காரணமாக அமைந்து சிறுநீரகப்பையினை சற்று கடுப்பிற்குள்ளாக்கி அதிகப்படியாக செயல்படச் செய்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு சிறு சிறு அளவில் கழிக்க நேரிடுகிறது. கருவுற்றலின் மற்றுமொரு பொதுவான அறிகுறி மாதவிடாய் தள்ளிப் போகுதல்.

கருவுற்ற ஒருவர் நாட்கள் செல்லச்செல்ல கருப்பை விரிவடைந்து சிறுநீரகத்தின் மீது அழுத்தம் அதிகரித்து சிருநீர் கழித்தலை உந்தும். எனவே கர்ப்பத்தின் போது அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு பொதுவான அறிகுறிக்கு இது காரணமாக அமைகிறது. இதனால் பல முறை நடு இரவில் தூக்கத்தின் போது நீங்கள் எழுவதையும் வழக்கமாகக் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button