மருத்துவ குறிப்பு

தொிந்துகொள்ளுங்கள் ! அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் என்னென்ன தெரியுமா?

பொதுவாக சில நோய்கள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும். இதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ள முடியும்.

அந்த நோய்கள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டால் நோய் வரும் முன் அந்த நோய்களில் இருந்து விடுபட முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த நோய்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும்.

இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.

கணைய புற்றுநோய்

இது இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது.

அதன் பிறகுதான் மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

ஆஸ்டியோபோரோசிஸ்

எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது.

எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக எலும்புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும்.

நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.

மாரடைப்பு

மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.

சிறுநீரக நோய்கள்

ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் தென்படாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள்.

ஆதலால் அவர்கள் யூரின் மைக்ரோ அல்புமின் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.

எச்.ஐ.வி.

ஆரம்பத்தில் இது எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button