மருத்துவ குறிப்பு

பெண்களே தொிந்துகொள்ளுங்கள்! இரண்டாவது முறை கருத்தரிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

ஒவ்வொரு பெண்ணும் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது மாதிரி தான். முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும். ஏற்கனவே ஒரு அனுபவம் இருப்பதால், எந்தெந்த மாதத்தில் என்னென்ன நடக்கும் என்பது தெரிந்திருக்கும். அதனால், உணர்ச்சி வசப்படுதல் குறைந்து இருக்கும்.

அதே நேரத்தில், இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். அதற்கும் முதல் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இருக்காது. இன்னும் சொல்லப் போனால், முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கலாம்.

அப்படி இரண்டாவது கர்ப்ப காலத்தில் நேரிடக் கூடிய சில பக்க விளைவுகள் இதோ…

களைப்பு

இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும். முதல் கர்ப்பத்தில் கூட நீங்கள் இவ்வளவு களைப்பை அடைந்திருக்க மாட்டீர்கள். உங்கள் கணவரும், முதல் கர்ப்பத்தின் போது உங்களைக் கவனித்துக் கொண்ட மாதிரி இப்போது கவனிக்காமல் போகலாம். அதை அடிக்கடி அவருக்கு உணர்த்திக் கொண்டே இருங்கள். நீங்களும் போதுமான அளவுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

வலிகள்

முதுகு வலி என்பது எந்த கர்ப்பத்தின் போதும் இயல்பாக வந்து வருத்தும். இரண்டாவது கர்ப்பத்தில் இந்த வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குனியும் போது கூட, முழங்கால்களை மடக்கித் தான் குனிய வேண்டுமே தவிர, முதுகை வளைத்துக் குனியக் கூடாது.

சுருட்டு நரம்புகள்

ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் திடீரென்று நரம்புகள் பின்னிக் கொள்ளும். எப்போதும் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமும் இதைச் சரி செய்ய முடியும்.

நீரிழிவு

உங்கள் முதல் கர்ப்பத்தின் போது நீரிழிவு ஏற்பட்டிருந்தால், இரண்டாவது கர்ப்பத்திலும் இது பக்க விளைவாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சர்க்கரை எடுத்துக் கொள்வதை அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் நீரிழிவைத் துரத்தியடிக்கலாம்.

வாந்தி

முதல் கர்ப்ப காலத்திலும் ஏற்படுவதைப் போலவே, இரண்டாவது கர்ப்பத்திலும் சகஜமாக வாந்தி ஏற்படும். ஆனால், இப்போது அந்த அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும். அதற்கேற்றவாறு சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button