சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்திய மங்கையரின் பின்னணியில் இருக்கும் அழகு இரகசியங்கள்!

பெண்கள் என்றாலே அழகு. அதிலும் இந்தியப் பெண்களின் அழகு, உலக ஆண் மகன்களை சுண்டியிழுக்கும் பேரழகு! உலகிலே முதன் முதலில் நாகரீக வாழ்க்கையை வாழத் தொடங்கியவர்கள் இந்தியர்கள் என்பது வரலாற்று உண்மை. நாகரீகம் தோன்றிய முதலே அழகில் தனி கவனம் செலுத்தி உள்ளனர் நம் நாட்டு பெண்கள். ஆனால், இன்று போல் இரசாயப் பூச்சுகளை பூசியோ அல்லது பலவகை மாஸ்க்குகளை உபயோகப்படுத்தியோ அல்ல. அவர்கள் பயன்படுத்தியது எல்லாம் இயற்கையான கை முறைகள் மட்டுமே.

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக பார்க்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அவர்கள் பேரழகினைக் கொண்டுள்ளனர். சரி, வாருங்கள் அப்படி என்ன இயற்கை முறையினைப் பயன்படுத்தி அவர்கள் பேரழகியாய் திகழ்ந்தனர் என அறிந்து கொள்ளலாம்…

வேப்பிலை

வேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதை மூலிகைகளின் அரசன் என்று கூட குறிப்பிடலாம். வேப்பிலையை சுடுநீரில் ஊற வைத்து பின் அந்த நீரில் முகம் கழுவினால் சருமம் மென்மையடையும் மற்றும் முகத்தில் தங்கும் இறந்த செல்களையும், நச்சுகளையும் முற்றிலுமாக அழித்துவிடும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவின் விலையை போலவே அதன் நற்குணங்களும் அதிகமாகும். குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்தால் கருத்தரிக்கும் பிள்ளை நல்ல நிறமாக பிறக்கும் என பொதுவாகவே நாம் அறிந்த ஒன்று. இயற்கையாகவே குங்குமப்பூவிற்கு நமது சருமத்தை பிரகாசிக்க வைக்கும் தன்மை உள்ளது. இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது. தினமும் சிறிதளவு பாலில் கலந்து பருகினால் சருமம் பொலிவடையும்.

தேன்

தேன் சுவையானது மட்டும் அல்ல. இதில் நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. தேனை முகத்தில் இருக்கும் வடுக்களின் மீது உபயோகப்படுத்துவதின் மூலம் வடுக்கள் குறையும். மற்றும் இதனை தினமும் காலை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடையும் குறையும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் இருக்கும் உயர்ரக வைட்டமின் சி ஊட்டச்சத்தின் மூலம் நாம் நிறைய அழகு பயன்களைப் பெறலாம். குறிப்பாக நெல்லியில் உள்ள வைட்டமின் சி பொடுகுத் தொல்லையை சரிசெய்கிறது மற்றும் உங்களது கூந்தல் நன்கு வளரவும் உதவுகிறது.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டியை நீங்கள் தெளிந்த நீரில் கலந்து முகத்திலும், கழுத்திலும் உபயோகப்படுத்தி வந்தால், உங்களது சருமம் பன்மடங்கு பொலிவு பெறும் மற்றும் இதன் சுத்திகரிக்கும் தன்மை சருமத்தில் இருக்கும் நச்சுகளைப் போக்கி புத்துணர்ச்சி தரும்.

மஞ்சள்

மிக எளிதாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருள் மஞ்சள். பழங்காலத்தில் வெள்ளிக் கிழமைகளில் மஞ்சள் தேய்த்து குளித்ததே இதன் மருத்துவ குணங்களின் மூலம் சருமம் பொலிவு பெறவும் பிரகாசமடையவும் தான். இது மட்டுமின்றி மஞ்சளை வாரம் ஒருமுறை உபயோகப்படுத்துவதன் மூலம் முகத்தில் வரும் சுருக்கங்களை போக்க முடியும்.

சந்தனம்

சற்று விலை உயர்ந்ததாக இருப்பினும் இதன் நற்குணங்கள் சருமத்தை நன்கு பாதுகாக்கிறது. சந்தனம் சருமத்தை மாசற்றதாக்கிட பெருமளவில் உதவுகிறது. இதன் குளிர்ச்சி தன்மை சருமத்தை எப்போதும் மென்மையாக வைத்திட உதவுகிறது.

துளசி

மிக எளிதாக அதுவும் இலவசமாக நமது வீட்டருகேயே கிடைக்கும் ஓர் சிறந்த மூலிகைத் துளசி. இதை நன்கு அரைத்து முகத்தில் உபயோகப்படுத்தினால் முகப்பரு நீங்கும். இதை பற்களால் நன்கு அரைத்து சாப்பிடுவதன் மூலம் பற்கள் வெண்மை அடையும்.

தயிர்

தயிரை தலையில் உபயோகப்படுத்துவதன் மூலம் கூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்ய இயலும். மற்றும் தயிரை முகத்தில் உபயோகப்படுத்தினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

கடலை மாவு

கடலை மாவைப் பயன்படுத்தி நீராடினால் தேகம் புத்துணர்ச்சி அடையும் மற்றும் தேகத்தில் இருக்கும் மாசு நீங்கி சருமம் பொலிவடையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button