ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…மொபைல் போன் தொலைந்து விட்டால் அதில் உள்ள தகவல்களை திரும்பபெறுவது எப்படி?

தற்போதைய சூழ்நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் இல்லாத நபரே இல்லை என்றாகி விட்டது. அதே நேரம் வெளியிடங்களுக்கு செல்லும் போது நமது மொபைல் போன்கள் திருடப்படவோ அல்லது தொலைந்து விடவோ செய்யலாம்.

அந்த கால கட்டங்களில் நம் மொபைலில் உள்ள தகவல்களை அப்படியே பெறுவது எப்படி என்பது குறித்த பதிவு தான் இது

ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்கள் காப்புப்பிரதிக்கான கிளவுட் ஸ்டோரேஜை சேர்த்தே வழங்குகின்றன.

Android சாதனத்திற்கான காப்புப்பிரதி விருப்பத்தை நமது பயன்பாடுகள், தொடர்புகள், அழைப்புக்கள், SMS போன்ற அனைத்து வகையான பயன்பாடுகளையும் எஸ்டி கார்டில் உள்ள தரவையும் காப்புப் பிரதி எடுக்க முடியும். இந்த செயலியை Google Play Store-லிருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பயன்பாடு மின்னஞ்சல் கணக்கு, கூகிள் டிரைவ், டிராப்பாக்ஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. SMS, MMS, அழைப்பு பதிவுகள் XML வடிவத்தில் காப்புப் பிரதி எடுக்க உதவுகிறது.

SMS Backup Restore இது தவிர G Cloud Backup மூலமும் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை எடுக்க முடியும்.

இந்த முறையில் வீடியோக்கள், இசை, எஸ்எம்எஸ், கேமரா, வாட்ஸ்அப், வைபர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் கூட திரும்ப பெற முடியும். கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து இதனை பதிவிறக்கம் செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button