லெக் ரோவிங் (Leg rowing)

தரையில் நேராகப் படுத்துக்கொள்ள வேண்டும். கைகளை உடலுக்கு அருகில் வைத்து, உள்ளங்கைகளை தரையில் பதிக்க வேண்டும். கால் முட்டிகளை மடித்து, பாதத்தை மேலே உயர்த்த வேண்டும். இந்த நிலையில் இருந்து, இரு முட்டிகளையும் மார்பு வரை கொண்டுவந்து மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல வேண்டும். இதை 8 – 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: கீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, ஃபிளாட்டான வயிற்றுப் பகுதி கிடைக்கும். தசைகள் வலிமை அடையும். டெலிவரிக்குப் பிறகு பெண்கள் இந்த பயிற்சி செய்வது நல்ல பலனை அளிக்கும்.

Leave a Reply