கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

வீட்டிலேயே கெரட்டின் தலைமுடி சிகிச்சை செய்ய,, அதிக செலவில்லாமல், வீட்டிலேயே பழைய சாதத்தை கொண்டு கெரடின் சிகிச்சை அளிக்கலாம்.

தலைமுடியை மென்மையாகவும், பட்டு போலவும் ஆரோக்கியமாகவும் இருக்க கெராடின் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், தலைமுடிக்கான கெரட்டின் சிகிச்சை (Keratin Hair Treatment) பெற பார்லருக்கு சென்றால், ஆயிரம் ரூபாயை விட அதிகமான பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

tgiyuhj

ஆனால் அதிக செலவில்லாமல், வீட்டிலேயே பழைய சாதத்தை கொண்டு கெரடின் சிகிச்சை அளிக்கலாம். பட்டு போன்ற மென்மையான அழகான கூந்தலை பெற பழைய சாதத்தின் உதவியுடன் வீட்டிலேயே கெரட்டின் தலைமுடி சிகிச்சையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

பழைய சாதத்திற்கும் கெராடின் சிகிச்சைக்கும் என்ன தொடர்பு

உங்கள் தலைமுடிக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் அரிசியில் உள்ளன. இதில் கெரட்டின் புரதம் அல்லது வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி உள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடிக்கு தேவையான புரதம் கிடைக்கிறது, மேலும் தலைமுடி அடர்த்தியானதாகவும், வலுவானதாகவும், மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

வீட்டிலேயே கெரட்டின் தலைமுடி சிகிச்சை செய்ய தேவையான பொருட்கள்:

பழைய சாதம்
தேங்காய் பால்
முட்டை வெள்ளை கரு
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்

வீட்டில் கெரட்டின் முடி சிகிச்சையை எவ்வாறு செய்து கொள்வது

முதலில், 2 முதல் 3 தேக்கரண்டி பழைய சாதத்தை எடுத்து அதில் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்க்கவும். உங்களிடம் தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காயை மிக்சியில் போட்டு அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுக்கலாம். அந்த கலவையில், முட்டையின் வெள்ளை மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது த்நேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக செய்யவும். பேஸ்ட் தயாரிக்க மிக்சியையும் பயன்படுத்தலாம். மென்மையான ஷாம்பூவினால் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்து உலர வைக்கவும்.

இப்போது நீங்கள் தயாரித்துள்ள இந்த பேஸ்டை ஒரு சீப்பு அல்லது பிரஷ் உதவியுடன் கூந்தலில் நன்றாக தடவவும். பின்னர் அதனை ஊர விடவும். துணி அல்லது டவல் கொண்டு முடியை கட்ட வேண்டாம். காற்றோட்டமாகவே வைத்திருங்கள். பின்னர் 40-45 நிமிடங்களுக்குப் பிறகு முடியை மென்மையான ஷாம்பூ கொண்டு சுத்தம் செய்யவும். நீங்கள் வீட்டில் தயாரித்த ஹோம்மேட் கெரட்டின் ஹேர் மாஸ்க் தடவி மூன்று நாட்களுக்குப் பிறகு தான், உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போட வேண்டும்.
fghj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button