தினமும் உலர்திராட்சை.நன்மைகளோ ஏராளம்!

கிஸ்மிஸ்பழம் என்றழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

திராட்சை பழத்தை விடவும் இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது, சுக்ரோஸ், ப்ராக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்கு பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.

இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் கண்விழித்ததும் உலர் திராட்சையை நசுக்கி, அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.

கர்ப்பிணிகளுக்கு வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

இதேபோன்று மாதவிடாய் வலியால் அவஸ்தைப்படும் பெண்கள், ஊறவைத்த உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

எடை குறைவாக இருக்கிறவர்கள், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிடலாம்.

அதுமட்டுமின்றி எலும்புகள் வலுவாக இருப்பதற்கு உலர்திராட்சை சாப்பிடலாம், ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளது.
உலர்திராட்சையை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்தான், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

Leave a Reply