ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இறுக்கமான உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.

இறுக்கமான உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

பெண்கள் பெரும்பாலும் ஆடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் காண்பிக்கும் அக்கறையை உள்ளாடை வாங்கும் விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இறுக்கமான, தடிமனான, தவறான அளவு கொண்ட பிராவை தேர்ந்தெடுத்தால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக அடிப்பகுதியில் ஒயர் கொண்ட இறுக்கமான பிராவை அணிந்து தூங்கும்போது பாதிப்புகள் அதிகமாகும். தவறான பிரா தேர்வால் ஏற்படும் இன்னல்கள் பற்றி பார்ப்போம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இறுக்கமான பிரா அணியும்போது ரத்த ஓட்டம் தடைபடக்கூடும். அதிலும் எலாஸ்டிக் அல்லது ஒயர் பதிக்கப்பட்ட பிராவை அணியும்போது பாதிப்பு அதிகமாகும். அவை இயல்பாகவே இறுக்கத்தை ஏற்படுத்திவிடும். தூங்கும்போது இத்தகைய பிராவை அணிவது அசவுகரியத்தை உண்டாக்கும். இறுக்கமான பிரா அணிவது தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். சவுகரியமாக தூங்க முடியாது.

இறுக்கமான பிரா அணிவது உடல் பகுதியில் எரிச்சல், தடிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இரவில் தூக்கமும் தடைப்பட்டு போகும். தூங்கும்போது அடிப்பகுதியில் ஒயர்கள், பட்டைகள் இல்லாத பிராவை உபயோகிப்பது நல்லது. வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

எலாஸ்டிக் தன்மை கொண்ட பிராக்கள் இறுக்கத்தை உண்டாக்கும்போது அவை உடலில் பதியும் பகுதிகளில் நிறமிகள் பாதிப்புக்குள்ளாகும். தூங்கும்போது இந்த பிராக்களை அணியும்போது நிறமிகள் அதிகமாகும். அதன் மூலம் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும். மென்மையான அல்லது உடலமைப்புக்கு பொருந்தும் தளர்வான பிராவை அணிந்து கொள்வது நல்லது.

தொடர்ந்து இறுக்கமான பிரா அணிந்தால் நிணநீர் அடைப்பு பிரச்சினையும் உண்டாகும். இது பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படும். மார்பகங்களில் நீர் வீக்கம் பிரச்சினையும் ஏற்படும். வலியற்ற கட்டிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

கோடை காலங்களில் இறுக்கமான பிரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரிக்கும். செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும். காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் நல்லது.

maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button