மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

புன்னகை என்பது இலவசமாக உங்கள் ஆரோக்கியம், மனநிலை ஆகியவற்றை மேம்படுத்தி, உங்களுக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் ஒன்றாகும். போலியான புன்னகையில் சில தசைகள் மட்டுமே செயல்படுகின்றன. அதேவேளை ஒரு உண்மையான புன்னகையில் ஏராளமான தசைகள் செயல்படுகின்றன.

புன்னகைத்தல் மிகவும் அவசியம். ஏனென்றால் இதைப் பெறும் நபருடன் ஒரு ஒன்றிணைப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. ஆகவே ஆரோக்கியமான வாழ்விற்கு புன்னகையுங்கள்!

சரி, இப்போது வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

இதயத்துடிப்பை சீராக்குகிறது

புன்னகை இதயத்திற்கான ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சி. இது இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

இந்த நவீன உலகில் மன அழுத்தம் என்பது பொதுவான ஒரு பிரச்சனை, இது பல்வேறுபட்ட உடல் உளப் பிரச்சனைகளை உருவாக்குகிறது. புன்னகைத்தல் மூளையில் ஹார்மோன்களை (எண்டோர்பின்கள்) சுரக்கச் செய்வதால், இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சிறந்த மனநிலை

புன்னகைத்தல் மூலம் வெளியேற்றப்படும் எண்டோர்பின்கள் உங்களில் சிறந்த மனநிலையை உருவாக்குகிறது.

ஆக்கத்திறனை அதிகரிக்கிறது

புன்னகை, ஆக்கத்திறனை அதிகரிக்கிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில அழகான விலங்குகளின் வேடிக்கையான இணையத்தளப் படங்கள் உண்மையில் மக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

நம்பிக்கையை ஊக்குவிக்கிறது

மக்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட அளவு நம்பிக்கையை புன்னகை உருவாக்குகிறது. சமூக அமைப்பில் முக்கிய கூறுகளில் ஒன்று நம்பிக்கை, புன்னகை சமூக அமைப்பில் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமன்றி, புன்னகைப்பவரின் மீது ஒரு நம்பிகையையும் உருவாக்குகிறது.

அனுதாபத்தை உருவாக்குகிறது

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற ஒரு கனிவான போக்கை புன்னகை உருவாக்குகிறது.

வருத்தத்தை தடுக்கிறது

நாம் புன்னகைக்காவிட்டால் வருத்தப்படுவதாக உணர்கிறோம். இவ்வாறு செய்யாவிட்டால் இது நமது மன அழுத்தத்தின் அளவை அதிகரிக்கிறது.

வலியை நீக்குகிறது

புன்னகை மற்றும் சிரிப்பு ஆகியவை இயற்கையான வலி நிவாரணிகள். எனவே இவை மன அழுத்த அளவைக் குறைக்கிறது.

கவனத்தை அதிகரிக்கிறது

புன்னகை நமது கவனத்திறனை விரிவுபடுத்தி, பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு நமக்கு உதவுகிறது. மேலும் நமது உள் உணர்வு மற்றும் அடிமனது பற்றிய ஆழ்ந்த அறிவை வழங்குகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

தொற்றும் தன்மை

50% மக்களின் புன்னகை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு காரணமாக அமைகிறது. ஏனென்றால் புன்னகை தொற்றும் தன்மைக்கு பிரபலமானது.

கவர்ச்சியை உருவாக்குகிறது

புன்னகை மக்கள் மத்தியில் அன்பை வரவழைக்கிறது. புன்னகைக்கும் பெண்களுடனே ஆண்கள் நெருக்கமாகிறார்கள், மாறாக புன்னகைக்காத பெண்களிடமல்ல.

வெற்றியைச் சம்பாதிக்கிறது

புன்னகையால் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை தோற்றுவிக்க முடியும். மேலும் இது அதிக பணம் சம்பாதிப்பதற்கு உதவுகிறது.

இளமைத் தோற்றம்

புன்னகைத்தல், முகத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுக்கிறது என அறிவியல் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

நீடித்த வாழ்நாள்

புன்னகைக்காதவர்களை விட புன்னகைப்பவர்கள் 7 வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது
புன்னகை உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் ரிலாக்ஸ் செய்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button