மருத்துவ குறிப்பு

மறக்காதீங்க! கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் எல்லாம் இது தான்!

Courtesy: MalaiMalar

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

தாய்மை என்பது ஒவ்வாரு பெண்ணின் வாழ்க்கையிலும் நிகழும் முக்கியமான தருணமாகும். குழந்தையை கருவில் தாங்கும் போது உடலிலும், மனதிலும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும்.

 

சில வகை உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும். சிலவகை உணவுகள சாப்பிட்ட வேகத்திலேயே வாந்தியாக வெளியேற்றப்படும்.கர்ப்ப காலத்தில் எந்த விதமான ணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி கூறுகிறார் திருவிடைமருதூர் அரசு மருத்துவனை மகப்பேறு மருத்துவர் ஏ.ஆர்த்தி

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

கர்ப்ப காலத்தில் எல்ல சத்துக்களும் சரி விகிதத்தில் அடங்கிய உணவை மட்டும் தேவையான அளவு சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் 5 முதல் 9 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.

ஆரோக்கியமான உடல்எடை, எளிதான பிரவத்துக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.

புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை, பால், காய்கறிகள், இறைச்சி, சோயா பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இளநீர், எலுமிச்சை சாறு, மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களை பருகலாம். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

இரும்புச்சத்து

முருங்ககைக்கீரை, முருங்கைக்காய், சுண்டடைக்காய், கடலைமிட்டாய், பேரீச்சம்பழம், முட்டை, ஈரல், கைக்குத்தல் அவல், கேழ்வரகு, உலர்திராட்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

கால்சியல்

பால், முட்டை, வெண்ணெய், கேழ்வரகு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ஃபோலிக் அமிலம் – பீன்ஸ், ஆரஞ்சு, கைக்குத்தல் அரிசி, பேரீச்சம் பழம், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் சி

ஆரஞ்சி, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, போன்ற பழங்களை சாப்பிடலாம். வைட்டமின் பி12 – அசைவ உணவுகள் அனைத்தையும் சாப்பிடலாம். சைவ உணவு உண்பவர்கள் இந்த வைட்டமின் மாத்திரை வடிவத்தில் எடுத்துகொள்ளலாம்.

ரத்தசோகை

இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோய்

மா, பழா, வாழை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சி, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம்.

அரிசி உணவை குறைத்து காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

ரத்த அழுத்தம்

உப்பு, எண்ணெய் அளவை குறைத்து கொள்ள வேண்டும். ஊறுகாய் போன்ற பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது.

தைராய்டு

உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் கர்ப்பிணிகள் முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button