மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்கள்!

பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் ஒரு அற்புதமான காலகட்டமாகும். இக்காலத்தில் ஒவ்வொரு தருணங்களும் பெண்கள் மறக்க முடியாதவாறு இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில் தங்கள் துணை உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புவார்கள்.

அதுமட்டுமின்றி, சில நேரங்களில் தங்களுக்காக தங்கள் துணையும் குறிப்பிட்ட விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென ஆசைப்படுவார்கள். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலம் மற்றும் கடைசி மூன்று மாத காலங்கள் தான் மிகவும் கடுமையாக இருக்கும்.

இக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது கணவன்மார்களும் சிறுசிறு விஷயங்களைப் புரிந்து நடந்தால் நல்லது. இங்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம்

கர்ப்ப காலத்தில் உணவுகள் முக்கிய பங்கைப் பெறுகிறது. சில பெண்கள் தாங்கள் சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதிகரித்துக் கொள்ளலாம். ஆகவே, இதை தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைப்பார்கள். மேலும் பசிக்கிறது என்று சொல்லும் போது அவர்களுக்கு எதையேனும் சாப்பிட கொடுக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.

மனநிலை மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதால், எப்போது கர்ப்பிணிகள் சந்தோஷமாகவோ, கோபமாகவோ இருக்கிறார்கள் என்பதை துணையால் சரியாக கணிக்க முடியாது. ஆகவே மனைவி கர்ப்பமாக இருந்தால், கணவன்மார்களுக்கு பொறுமை சற்று அதிகமாகவே இருக்க வேண்டும். மேலும் மோசமான நிலைமையை சரியான வழியின் மூலம் சரிசெய்ய முயல வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வர்ணிப்பது

அனைத்து பெண்களுக்கும், தங்கள் கணவன் எப்போதும் தன்னை வர்ணிக்க வேண்டுமென விரும்புவார்கள். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குண்டாகி, தங்களது உடலமைப்பில் மாற்றம் ஏற்படுவதால், இக்காலத்தில் தங்கள் கணவன் வர்ணிப்பதுடன், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.

அன்பு மற்றும் அதிக அக்கறையை வெளிக்காட்டவும்

கர்ப்பிணிகள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு மற்றும் அக்கறையை தானாக வெளிக்காட்ட வேண்டும். அதில் கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது, தூங்கும் போது அரவணைத்தபடி இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதனால் தம்பதியருக்குள் இருக்கும் பிணைப்பு இன்னும் அதிகரிக்கும்.

சமைத்துக் கொடுப்பது

கர்ப்பிணிப் பெண்கள் சமைக்கும் போது ஒருசில உணவுப் பொருட்களின் வாசனையை நுகரும் போது வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளைப் பெறுவார்கள். இந்நேரத்தில் தன் கணவன் தனக்காக சமைத்துக் கொடுக்க வேண்டுமென விரும்புவார்கள்.

உணர்வுகளை மதிக்கவும்

பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட பயமாக இருக்கும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது தான் ஆபத்தானது. ஆனால் அதற்கு பின் ஈடுபடுவது நல்லது. ஒருவேளை விருப்பம் இல்லாவிட்டால், அவர்களை வற்புறுத்தாமல் விட்டுவிடுங்கள். இந்த புரிதலால் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பு மேலோங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button