மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! காதுக்குள் இருக்கும் பருக்களால் அவஸ்தையா?

இந்த காலத்தில் முகப்பரு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சரும பிரச்சனைகளில் ஒன்று. பரு என்றாலே முகத்தில் தான் வரும் என்று எந்த ஒரு சட்டமும் இல்லை. பரு என்பது முகத்தைத் தவிர காதுகளுக்கு உள்ளேயும் வரும். காதுகளுக்கு உள்ளே ஏற்படும் பரு, முகத்தில் ஏற்படுவதை விட வேதனையை அதிகமாகவே தரக்கூடும்.

Quick ways to treat pimples inside the ear
காதுகளில் பரு வந்தால் அதை எப்படி போக்குவது என்ற குழப்பம் இருக்கத் தான்செய்யும். இதை கவனிக்காமல் விட்டால் பருக்கள் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.

வாருங்கள், இப்போது நாம் காதுக்கு உள்ளே ஏற்படும் பருக்களைப் போக்குவதற்கான சில எளிய வழிகளைப் பற்றி பார்ப்போம்…

தண்ணீர் :

தண்ணீரைக் கொண்டு காதுகளைக் கழுவுவதால் காதுகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளைப் போக்கி நோய் தொற்றுகளை அழித்துவிடும்.

ஆல்கஹால் இல்லாத சோப்பைக் கொண்டு கழுவினால் அது காதை முழுமையாக சுத்தம் செய்து பருக்களை ஒழித்துவிடும். நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை இதை செய்தால் காதுக்குள் பரு ஏற்படுவதை தடுத்துவிடலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு காதிகளில் உள்ள பருக்களை அழிக்க உதவுகிறது. ஒரு பஞ்சு உருண்டையில் ஹைட்ரஜன் பெராக்ஸைடை தொட்டு காதில் உள்ள பருக்களின் மீது சிறிது நேரம் வைத்திருங்கள்.

பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சி உருவாக்கக்கூடிய கிருமிகளை அழித்து பருக்களை சீக்கிரம் ஆற வைத்து இருந்த தடம் தெரியாமல் மறையச் செய்துவிடும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஆல்கஹால்

ஆல்கஹாலை ஒரு சிறிய பஞ்சு உருண்டையில் தொட்டு பருக்களின் மீது வைக்க வேண்டும். இது பருக்களை சீக்கிரம் ஆற வைத்து மேற்கோண்டு பரு பரவாமல் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை இதை செய்யலாம்.

துளசி இலைகள்

சிறிது துளசி இலைகள் எடுத்து நசுக்கி சாறு எடுத்து, அந்தச் சாற்றை பஞ்சில் தொட்டு காதில் உள்ள பருக்களின் மீது தடவுங்கள். சிறிது நேரம் அதை உலர விட வேண்டும்.

பின்னர், சுத்தமான தண்ணீரில் கழுவிட வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை இதை ட்ரை செய்யதால் சுலபமாக போக்கி விடலாம்.

க்ரீன் டீ பைகள்

க்ரீன் டீக்களில் உள்ள அதிகபடியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் தொற்றுகளை நீக்கும் பண்புகள் பருக்களை விரைவில் நீக்க உதவுகிறது.

விட்ச் ஹாசல் ஆயில்

சிறிது விட்ச் ஹாசல் ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை பஞ்சில் தொட்டு காதில் உள்ள பருக்களில் தடவி சுத்தம் செய்ய வேண்டும்.

விட்ச் ஹாசல் ஆயிலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைரஸ் எதிர்ப்புகள் மற்றும் கிருமிநாசினிகள் அதிக அளவில் உள்ளது. எனவே, இதுவும் நல்ல பலன் தரும்.

முகப்பரு கிரீம்

முகப்பரு கிரீமை உபயோகிப்பது மற்றொரு முக்கிய சிகிச்சை முறையாகும். முகப்பரு கிரீமில் 2% முதல் 10% வரை பென்சோயில் பெராக்சைடு உள்ளது.

பென்சோயில் பெராக்சைடு பருக்களை விரைவாக ஆற வைத்து பரவாமல் தடுக்கி உதவுகிறது. நீங்கள் 10% க்ளைகோலிக் ஆசிட் கிரீமை கூட பருக்களைப் போக்க பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button