மருத்துவ குறிப்பு

அக்குள் அரிப்பு பயங்கரமா இருக்கா? இயற்கை தீர்வுகள்!

உடலிலேயே அக்குள் தான் மிகவும் சென்சிடிவ்வான பகுதி. அந்த பகுதியில் தான் அதிகமாக வியர்க்கவும் செய்கிறது. பொதுவாக வியர்வை அதிகமாக இருக்கும் இடத்தில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்ச்சி அடையும். பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கமடையும் போது, அந்த இடத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது. அக்குள் பகுதியில் அரிக்க ஆரம்பித்தால், அதை சமாளிப்பது என்பது மிகவும் கடினமானது.

ஒருவருக்கு பல காரணங்களால் அக்குளில் அரிப்பு ஏற்படலாம். அதில் மோசமான அக்குள் சுகாதாரம், அதிகப்படியான வியர்வை, காலநிலை மாற்றம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள், சோப்பு அல்லது பெர்ஃயூம்மில் உள்ள டாக்ஸின்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அக்குள் அரிப்பை சந்திப்பவர்கள், அரிப்புடன் வலி, துர்நாற்றம், கருமையான மற்றும் சிவந்த அக்குளை அனுபவிக்கக்கூடும். ஆனால் இந்த பிரச்சனைக்கு ஒருசில இயற்கை தீர்வுகள் உள்ளன. கீழே அந்த இயற்கை தீர்வுகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.

டீ-ட்ரீ ஆயில்

அக்குள் அரிப்பு மற்றும் தொற்றுகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக டீ-ட்ரீ ஆயில் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், அக்குளில் அரிப்பை உண்டாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். இந்த எண்ணெய் வலிமிக்க அக்குள் அரிப்பில் இருந்து விடுவிக்கும்.

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் டீ-ட்ரீ ஆயிலை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அக்குளில் அந்த கலவையைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இல்லாவிட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், 5-6 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, அந்த கலவையை அக்குளில் தடவி 10 நிமிடம் காய வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக கருதப்படுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், பாக்டீரியல் தொற்றுக்களை எளிதில் நீக்கி, விரைவில் அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

* ஒரு எலுமிச்சை துண்டை அக்குளில் 5 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.

* இல்லையெனில், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்நீரை அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் அக்குள் அரிப்பில் இருந்து விடுவித்து, அக்குளில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பிற அழுக்குகளையும் நீக்கும்.

அதற்கு ஓட்ஸை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். ஓட்ஸ் நன்கு மென்மையானதும், அதில் லாவெண்டர் ஆயில் சிறிது சேர்த்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழையில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் அரிப்புக்களை நீக்குவதோடு, அக்குளில் உள்ள சிவந்து தடித்த சருமத்தையும் போக்கும்.

* கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை பயன்படுத்தினால், அக்குள் அரிப்பு விரைவில் குணமாகும்.

* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும் இதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன. இந்த பண்புகள் தான் அக்குள் அரிப்பை குறைக்கின்றன.

* தேங்காய் எண்ணெயை அரிப்புமிக்க அக்குளில் ஒரு நாளைக்கு பலமுறை தடவுங்கள்.

* இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்து, அக்குளில் தடவுங்கள். இதனால் அக்குள் அரிப்பு விரைவில் நீங்கும்.

வேப்பிலை

வேப்பிலைக்கு எப்பேற்பட்ட தொற்றுக்களையும் போக்கும் திறன் உள்ளது. ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

* வேப்பிலையை நீரில் போட்டு அடுப்பில் வைத்து 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அந்நீரால் அக்குளை கழுவுங்கள்.

* இல்லாவிட்டால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 5-6 துளிகள் வேப்ப எண்ணெயை சேர்த்து கலந்து, அந்த நீரை அக்குளில் தினமும் தடவி வந்தால், அக்குள் அரிப்பு காணாமல் போய்விடும்.

ஒத்தடம்

அக்குளில் அரிப்பு மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்தால், அக்குளில் தொற்று கடுமையாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் காட்டன் துணியில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு கட்டி, அக்குளில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் அக்குள் அரிப்பில் இருந்து விடுபடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button