ஆரோக்கியம் குறிப்புகள்

பெண் குழந்தை இருந்தா? நீங்க இதெல்லாம் செஞ்சே ஆகணும்!

பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அவர்களுடைய அப்பா தான் எல்லாமே. அவர்கள் மூலமாக தான் எதையும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள்.

What Daughters Need From Their Fathers
ஒரே விஷயத்தை அம்மா கூறி மகள்கள் கேட்பதற்கும், அப்பா கூறி மகள்கள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன..

பாரமாக பார்க்க கூடாது!

மகள்களை மிகவும் வருத்தப்பட வைக்கும் செயல் இது! ஆம், பெற்றுவிட்டோமோ, ஒருவழியாக வளர்த்து, படிக்க வைத்து கரைசேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொள்ள கூடாது. மகனை போலவே மகளையும் பார்க்க வேண்டும். மகள்களை பாரமாக எண்ணுதல் கூடாது.

நண்பனாக…

மகள்களின் முதல் காதலே அப்பா தான். இந்த முதல் காதல் பெண்களுக்கு எப்போதும் தோல்வியில் முடிவதில்லை. எந்த ஒரு அப்பா மகளுக்கு சிறந்த நண்பனாக திகழ்கிறாரோ, அந்த மகள் ஒருபோதும் தவறு செய்ய துணிவதில்லை.

கட்டாயப்படுத்துதல்!

இதை செய், இதை படி, திருமணம் செய்துக் கொள், வேலைக்கு போகாதே என எந்த ஒரு செயலிலும் கட்டாயப்படுத்தக் கூடாது.

சந்தேகம்!

ஊரே எதிர்த்து நின்றாலும், தன் மகளின் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க கூடாது.

பெருமை

இவரு தான் எங்கப்பா, எங்கப்பா யாரு தெரியுமா? அவரு அப்படி, இப்படி என பெருமையாக பேசும்படி நடந்துக் கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் ஆஸ்கர் அல்லது ஒலிம்பிக் மெடல் வாங்க வேண்டும் என்றில்லை. நல்லவராக இருந்தாலே போதும்.

காதல்!

காதல் என்பது இயல்பு, காதலன் சரியானவனா? தவறானவனா? என பார்க்க வேண்டுமே தவிர, காதலையே தவறாக பார்க்க கூடாது.

நல்லது, கெட்டது…

எது நல்லது, எது கெட்டது என கூற வேண்டும். ஒரு நபருடன் எப்படி பழக வேண்டும். யாரை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும். நல்ல அறிவுரைகள் அளித்து வழிநடத்த வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அச்சப்படுத்த வேண்டாம்!

அதற்காக தொட்டதற்கு எல்லாம் பயமுறுத்த கூடாது. அவர்களுக்குள் அச்ச உணர்வை விதைக்க கூடாது. தைரியமாக வளர ஊக்கம் அளியுங்கள். மகள்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க காரணமாக இருந்துவிடாதீர்கள்.

கனிவு!

கனவுகள் ஏந்தி உயர பறக்க துடித்துக் கொண்டிருக்கும் மகளிடம் கனிவுடன் நடந்துக் கொள்ளுங்கள். அவர் உயர பறக்க பயிற்சி அளியுங்கள். உங்களது விருப்பு வெறுப்பை காண்பித்து சிறகுகளை உடைத்து விடாதீர்கள்.

பாதுகாவலன்!

மகள்களின் இரகசியங்களை பாதுகாக்கும் காவலனாய் இருக்க வேண்டும். அவர் உங்களிடம் எதையும் மறைக்காமல் கூறும் அளவிற்கு நீங்கள் ஒரு நம்பகமான அப்பாவாக திகழ வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button