உடல் பயிற்சி

பார்வைக்கு எளிய பயிற்சிகள்

சீனர்களுக்கு மற்ற நாட்டினரைக் காட்டிலும் கண்பார்வை கூர்மையாக உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உடற்பயிற்சி போலவே அவர்கள் கண்களுக்கு பயிற்சி எடுக்கும் பழக்கம் தான் இதற்கு காரணம். இந்த பயிற்சிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒவ்வொரு பயிற்சியாக செய்தால் போதும். கண்ணாடி இல்லாமலே பார்வை பளிச்சிடும்.

பயிற்சி 1: தலையை அசைக்காமல் கண்களை வலமிருந்து இடமாகவும் பிறகு இடமிருந்து வலமாகவும் பார்க்க வேண்டும். இப்படி 8 முறை செய்ய வேண்டும். எவ்வளவு தூரத்திற்கு பார்க்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு பார்க்க வேண்டும்.

பயிற்சி 2: மேல் இருந்து கீழாகவும், பிறகு கீழ் இருந்து மேலாகவும் பார்க்க வேண்டும். இதை 8 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 3: கண்களை வலமிருந்து இடமாக கடிகார முட்களைப் போல 8 முறை சுழற்ற வேண்டும். இதேபோல இடமிருந்து வலமாக 8 முறை சுழற்ற வேண்டும்.

பயிற்சி 4: உங்களது கண்களுக்கு முன்னால் படுக்கை வசத்தில் 8 என்ற எண் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். முதலில் வலமிருந்து இடமாக கண்களால் 8ஐ போடுங்கள். இதையே மாற்றி இடமிருந்து வலமாக செய்ய வேண்டும்.

பயிற்சி 5: கண்களுக்கு முன்னால் செங்குத்தாக 8 என்ற எண் இருப்பதாக பாவித்துக்கொள்ளுங்கள். முதலில் மேல் இருந்து கீழாகவும் பின் கீழ் இருந்து மேலாகவும் கண்களால் 8 போட வேண்டும்.

பயிற்சி 6: வலது கண்ணின் மேல் கார்னரை உற்று நோக்க வேண்டும். பிறகு வலது கண்ணின் கீழ் கார்னரை பார்க்க வேண்டும். இதை 8 முறை செய்ய வேண்டும். இதேபோல இடது கண்ணின் மேல் கார்னரையும் கீழ் கார்னரையும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் கண்களை சிமிட்ட வேண்டும்.

இந்த பயிற்சிகள் முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்தவாறே வலது உள்ளங்கையால் இடது கண்ணையும், இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் மூட வேண்டும். சில வினாடிகள் கழித்து கண்களை சிமிட்டிக் கொண்டே கைகளை மெதுவாக எடுக்க வேண்டும்.

பிறகு எதிரே உள்ளவற்றை முழுமையாக பார்க்கலாம்.

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை இந்த பயிற்சிகளை செய்யலாம். 30 முதல் 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலன் உண்டு. பயிற்சி காலத்தில் மது, புகை கூடாது.
7e000e67 ad7c 46d0 9757 c04421c9d43c S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button