ஆரோக்கியம் குறிப்புகள்

இதயத்தைப் பாதுகாத்திட, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள்!

இன்றைய கால நிலையில் நமது வாழ்வியலில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இதயம் தான். இன்று மக்கள் அதிகமாக அவதிப்படும் கோளாறுகளில் முதல் இடத்தில் இருப்பதும் இதயம் தான். நீங்களே சற்று கூர்ந்து யோசித்து பார்த்தால் சமீபத்தில் உங்களது உறவினர்களில் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் அதிகம் பேருக்கு இதய பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தது உங்கள் ஞாபகத்திற்கு வரும். நீங்கள் நினைப்பது போல பெரிய பெரிய மாற்றங்களினால் இந்த மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. சின்ன சின்ன விஷயங்களை நாம் அன்றாடம் செய்ய மறந்ததன் பெரிய விளைவாக தான் இந்த நம்மில் பலருக்கும் இதய பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

மாரடைப்பை தடுக்க 30 எளிய வழிகள்!!!

சரி, அப்படி என்ன மாற்றங்களினால் இதய கோளாறுகள் அதிகரித்திட காரணமாயின? என்ற கேள்விக்கு பதில் தான் இந்த கட்டுரை. வேலை செய்திடும் போது இடையில் சிறு ஓய்வு கொடுப்பது, சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாதது, உறக்கமின்மை போன்றவை தான் முதன்மை காரணங்களாக இருக்கிறது. “அந்நியன்” விக்ரம் போல இந்த சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாமா இதய பாதிப்பு ஏற்படும் என்று கேட்டால் ஆமாம் என்பது தான் பதில். வாகனங்களுக்கு எப்படி இன்ஜினோ அவ்வாறு தான் மனிதர்களுக்கு இருதயம். இன்ஜின் கூட ஓய்வு எடுக்கிறது, நம் இதயம் ஓய்வெடுத்தால்? மரணம் தான் மிஞ்சும். நம் உடல் நலத்தில் நாம் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய பாகம் இதயம் ஆகும். இனி, உங்கள் இதயத்தைப் பாதுகாத்திட, நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பழக்க வழக்கங்கள் என்னவே தெரிந்துகொள்ளலாம்….

 

கட்டிப்பிடிப்பது

நமது அன்றாட வாழ்கையில் முகம் பார்த்து பேசவே நேரம் இன்றி ஓடுகிறோம். சமூக வலைத்தளங்களில் வார்த்தை பரிவர்த்தனையின் மூலமாக மட்டும் தான் நமது உறவுகள் இன்று ஓடிக்கொண்டிருகின்றன. இதுவும் இதய பாதிப்புகள் ஏற்பட ஓர் முக்கிய காரணம் ஆகும். அன்பின் பரிமாற்றம் தான் கட்டிபிடிப்பது. இது நமது நாளை இலகுவாக தொடங்க உதவும். இதயத்தை பாரமின்றி உணர பயனளிக்கும்.

செல்லப்பிராணி

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது இதய நலத்திற்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், தினம் தினம் நாம் செல்லப்பிராணிகளின் மீது காட்டும் அன்பின் வெளிபாடு இதயத்தை பாதுகாக்கிறது. இதில் இருந்து நீங்கள் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் அன்பு தான் இதயத்தை காக்க உதவும் சிறந்த மருந்து.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தொலைகாட்சி பார்ப்பது

தினமும் அழுதுவிடியும் வீண் தொடர்களை பார்ப்பதை தவிர்த்து.உங்கள் மனதிற்கு பிடித்த நிகழ்சிகளை பாருங்கள். ஏனெனில், நீங்கள் அழும் போது மிகவும் பாதிக்க கூடிய உடல் பாகம் இதயம். தினம் தினம் அழுது நீங்களே உங்களுக்கு வினையை தேடிக்கொள்ளாதீர்கள்.

நல்ல உறக்கம்

என்ன தான் வேலை மிகுதியாக இருப்பினும் கூட, சரியான நேரத்திற்கு உறங்க செல்வது கட்டாயமான விஷயம் ஆகும். உறக்கமின்மையின் காரணாமாக தான் உலகில் நிறைய பேருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதை ஓர் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. குறைந்தது ஓர் நாளுக்கு 7 முதல் 8 மணி வரை தூங்குவது அவசியமாகும்.

போக்குவரத்து மற்றும் நெரிசல்

முடிந்த வரை போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் நேரம் செலவழிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் அங்கு ஏற்படும் மிகுதியான சத்தத்தினால் இதயம் மிகவும் பாதிக்கப்படும். இளம் வயதில் இது தெரியாவிட்டாலும். வயதாக, வயதாக இதன் வெளிப்பாடு உங்களுக்கு தெரியவரும்.

வாய்விட்டு சிரியுங்கள்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். இன்று நமது வாய்க்கு பதிலாக விரல்கள் தான் அனேக நேரங்களில் LOL, ROFL, என சிரிக்கின்றன. எனவே நண்பர்களுடனும், உணர்வினர்களுடனும் முடிந்த வரை மனம் திறந்து பேசி வாய்விட்டு சிரியுங்கள், நோய் இன்றி வாழுங்கள்.

வேலைகளுக்கு இடையே இடைவேளை

நீங்கள் வேலை செய்வது முக்கியம் தான் ஆயினும். அவ்வப்போது குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 1௦ நிமிடங்கள் இடைவேளை விட்டு பின் உங்களது வேலையை தொடங்குங்கள். இது உங்கள் இதயத்திற்கும் நல்லது. மற்றும் நீங்கள் நன்கு வேலை செய்யவும் உதவும்.

இறைசிகளை குறைத்துக்கொள்ளுங்கள்

சைவ உணவு இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்காக நீங்கள் முற்றிலும் கைவிட இயலாது எனினும். முடிந்த வரை அசைவ உணவு வகைகளை உட்கொள்வதை குறைத்து கொள்ளுங்கள். இது இதய கோளாறுகள் ஏற்படுவதை குறைக்கும் ஓர் நல்ல பழக்கம் ஆகும்.

காபி

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் அறிந்ததே ஆகும். இது காபிக்கு சரியாக பொருந்தும் பழமொழி ஆகும். தினமும் ஒரு கப் காபி குடிப்பது நல்லது, ஆனால், அளவை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில், காபியில் இருக்கும் காஃபின் என்னும் மூலப்பொருள் அதிகமானால் இதய கோளாறுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளன.

திருமணம்

இதையெல்லாம் நீங்கள் நினைவில் கொள்ளாவிட்டாலும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்ள ஒரு உறவு இருந்தால் தானே இதை எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார். எனவே பேச்சுலராக இருந்தால் நீங்கள் கூடிய விரைவில் திருமணம் செய்துக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தினுள் குடி அமர்ந்து உங்கள் இதயத்தை அவர் நன்றாக பார்த்துக்கொள்வார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button