பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல தொகுப்பாளினி யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார்? யாரிடம் எல்லாம் நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்பது குறித்து நாள்தோறும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டேவும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் நடிகை பிரியங்காக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.