மருத்துவ குறிப்பு

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான 9 அசத்தலான வழிகள்!!! தெரிஞ்சிக்கங்க…

உடல் எடை அதிகமாக இருப்பது தான் இன்றைய தேதியில் பலருக்கும் இருக்கும் பரவலான பிரச்சனையாகும். அதற்கு சரியான நேரத்தில் உணவருந்தாமல், ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உட்கொண்டு, ஒழுங்கற்ற வாழ்வு முறையை கடைப்பிடித்து வருவதே முக்கியமான காரணங்களாகும். உடல் எடையை குறைக்க அவரவர் எடுக்கும் முயற்சிகளுக்கு அளவே இல்லை. உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள், மருந்து மாத்திரைகள் என பல வழிகளை கையாளுவார்கள்.

எடையைக் குறைக்க காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான விஷயங்கள்!!!

பலருக்கு மிக கடுமையான டயட் திட்டத்தை பின்பற்றியும் கூட நல்ல பலனை அளிக்காது. அதில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் எதற்கும் ஆகாத அந்த டயட் திட்டத்தை கைவிட்டு பேசாமல் வேறு ஒரு முறையை தேர்ந்தெடுங்கள். அப்படியாவது உடல் எடையை சற்று குறைக்கலாம் அல்லவா?

அன்றாட வாழ்க்கையில் சில விதிமுறைகளை பின்பற்றினால் இவ்வகையான டயட்களை தூக்கி எறியலாம் என உடல் எடை குறைப்பு நிபுணரான ஸ்டீவ் மில்லர் கூறியுள்ளார். சிறந்த முறையில் உடல் எடையை குறைக்க சில தந்திரங்கள் உள்ளது. அதற்கு வயிற்றை வத்தப்போட்டு கொண்டு கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?…இப்படிச் செய்யலாம்!

கண்ணாடி ஒன்றை தூக்கிச் செல்லுங்கள்

கூடுதலாக சில கிலோக்களை குறைக்க வேண்டுமானால் உட்கொள்ளும் அளவுகளில் கவனம் தேவை. அதற்கு நீங்கள் செல்லும் இடங்களுக்கு கண்ணாடி ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் எவ்வளவு குண்டாக இருக்கிறீர்கள் என்பதை அது உங்களுக்கு நினைவுப்படுத்தும். இதனால் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதை அது உங்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நீங்களே உடல் குறைப்பிற்கான சாட்டையாக மாறுங்கள்

உடல் எடையை குறைக்க உங்களை நீங்களே ஊக்குவிக்க வேண்டும். உணவுகளை பார்க்கும் போது எளிதாக அதில் ஈர்க்கப்பட்டு உண்ணத் தொடங்கி விடுவீர்கள். அதனால் மனக்கட்டுப்பாடு என்ற சாட்டையை கையில் எடுத்து கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

சாக்கு போக்கு சொல்வதை முதலில் நிறுத்துங்கள்

பல வருடங்களாக மக்கள் இப்படி தான் கூறி வருகிறார்கள் – “இந்த தீபாவளிக்கு நான் அதிகமாக குண்டாகி விட்டேன். எப்படியும் உடல் எடை அதிகரித்து விட்டதால் இன்னும் கொஞ்சம் சாப்பிட்டு கொள்கிறேன்.”. இது வெறும் ஒரு சாக்கே. முதலில் இதனை நிறுத்தவும். வயிறு நிறைந்திருக்கும் போது, மேலும் உண்ணுவதை முதலில் நிறுத்துங்கள். உணவு அல்லாத வேறு ஒரு விஷயத்திற்கு கவனத்தை எடுத்துச் செல்லுங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஒன்று உணவை மறைத்து வையுங்கள் அல்லது வாங்காமல் விட்டு விடுங்கள்
ஒன்று உணவை மறைத்து வையுங்கள் அல்லது வாங்காமல் விட்டு விடுங்கள்
வீட்டில் சாக்லேட் மற்றும் பிஸ்கட்கள் கிடந்தால் அவைகளை சாப்பிடாமல் இருக்க முடியாது. அதனால் அவ்வகை உணவுகள் வாங்குவதையே தவிர்த்து விடுங்கள். இவை உங்கள் உடல் எடை குறைப்பு இலக்குகளுக்கு தடையாக செயல்படும்.

டயட்டை தவிர்க்கவும்

உடல் எடையை குறைப்பதற்கான முதல் வழி என்ன தெரியுமா? ஜங்க் உணவுகளை ஒரேடியாக தவிர்க்க கூடாது. மாறாக ஒவ்வொரு நாளும் நீங்கள் உண்ணும் உணவில் 80% ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் . மீதமுள்ள 20% ஜங்க் உணவுகளாக இருக்கலாம்.

அலைபாயும் மனதை கட்டி வையுங்கள்

விடுமுறைகளின் அழுத்தங்களுக்கு பிறகு, புது வருடம் பிறக்கும் போது நாம் மீண்டும் தவறான வழியை தேர்ந்தெடுக்கலாம். இதனால் பல தீய உண்ணும் பழக்கங்கள் மீண்டும் தலைத்தூக்கலாம். அவ்வகையான எண்ணங்களை தலைத்தூக்க விடாதீர்கள். இல்லையென்றால் அந்த உணவுகளை உண்ணும் போது உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயம் அளவே இல்லாமல் போய் விடும். அவ்வகையான உணவுகளை உண்ண ஆசை ஏற்பட்டால், நாக்கை கடித்துக் கொண்டு ஓடியே விடுங்கள்.

எச்சரிக்கை அறிகுறியை வைத்துக் கொள்ளுங்கள்

கிரெடிட் கார்டு அளவிலான ஒரு எச்சரிக்கை அறிகுறிகளை எப்போதும் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள் – “நீ குண்டாக இருந்தால் சாப்பிடும் முன் யோசிக்கவும்” என அதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன் அதை படியுங்கள். இதனால் நீங்கள் உண்ணும் அளவில் கட்டுப்பாடு இருக்கும்.

போட முடியாத உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிய முயற்சி செய்யுங்கள்

வீட்டில் உணவருந்த அமரும் போது, உங்கள் படுக்கையறைக்கு சென்று உங்களுக்கு போதாத அளவிலான ஆடையை அணிய முயற்சி செய்து பாருங்கள். உங்கள் உணவின் அளவை கட்டுப்படுத்த இதுவே ஒரு ஊக்குவிக்கியாக செயல்படும்.

யோகா மற்றும் தியான பயிற்சி எடுங்கள்

“ஆழமாக சுவாசிப்பது, தியானத்தில் ஈடுபடுவது மற்றும் சில யோகாசனங்கள், உணவின் மீதான உங்களின் ஆசையை கட்டுப்படுத்தி, அழுத்த அளவுகளை குறைக்க உதவும். அதிகமாக இல்லையென்றாலும் கூட தினமும் சில நிமிடங்களாவது ஆழமாக சுவாசியுங்கள்.” என புகழ் பெற்ற ஊட்டச்சத்து வல்லுநர் ப்ரியா கத்பால் கூறியுள்ளார். யோகா செய்வதால் உங்கள் உடல் நீட்சி அடையும். இதனால் உடலில் உள்ள எந்த ஒரு பகுதியில் இருந்தும் கொழுப்புகளை குறைக்க இது உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button