ஆரோக்கியம் குறிப்புகள்

P அல்லது Rல் உங்கள் பெயர் துவங்குகிறதா?சுவாரஸ்யத் தகவல்…

பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அதனை அவ்வளவாக சட்டை செய்யாது செல்பவர்களா நீங்கள்? இந்த தகவல் உங்கள் எண்ணத்தை மாற்றிடும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

Is Your Name Starts With P or R?
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது இந்த தன்னம்பிக்கை தான். ஆர் மற்றும் பி போன்ற எழுத்துக்களில் உங்களுடைய பெயர் ஆரம்பிக்கும்.இந்த பெயருடையவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

#1

பெரும்பாலும் இவர்கள் துலாம் ராசிக்காரர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் நேரடியாக இருக்குமென்பதால் எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவுகள் சூழவே இருப்பார்கள். தனிமையை விரும்ப மாட்டார்கள்.

எல்லாரும் தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். சின்ன சின்ன தவறுகளுக்கு கூட அதிகம் வருந்துவர்.

#2

பிறரை ஈர்க்கும் தன்மை இவர்களிடத்தில் அதிகமுண்டு,அழகுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்களையும் தங்களைச் சுற்றியும் அழகாகவெளிப்படுத்த நிறைய மெனெக்கெடுவார்கள்.

கலை விஷயங்களில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும்.

#3

இவர்களுக்கு சூரியனின் நேரடி பார்வை கிடைப்பதால் சோர்வாக முடங்கியிருக்க நினைக்க மாட்டார்கள். நிறைய நண்பர் பட்டாளம் உண்டு. அதே போல குடும்ப உறுப்பினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பர்.

உடல் நிலையில் அடிக்கடி எதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும்.

#4

சமூகத்துடன் எப்போதும் நெருக்கம் பாராட்டுவீர்கள். சமூகத்தில் நடக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனக்கவலை கொள்வீர்கள். எந்த சின்ன விஷயத்திற்கு சட்டென உணர்சிவசப்படக்கூடியவராக இருப்பீர்கள்

#5

உடலுழைப்பு செய்ய விரும்ப மாட்டீர்கள். உங்களது மூளை அபாரமானதாக இருக்கும், மூளையின் செயல்பாடு வேகமாக இருக்கும் கணக்குப் புதிர்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது இருப்பு அனைவராலும் விரும்பப்படும்.

#6

எல்லாவற்றிலும் நேர்த்தியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள். எல்லாமே கச்சிதமாக, சொன்ன நேரத்தில் சொன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சட்டென கோபம் கொள்வதால் அடிக்கடி மனஸ்தாபங்கள் நிகழும் .

தங்களை அழகாக காட்டிக் கொள்ள நிறைய மெனெக்கெடுவார்கள். இசையில் அதிக ஆர்வமிருக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

#7

இவர்களுக்கு கடவுள் பக்தி சற்று கூடுதலாக இருக்கும். பெரியவர்களின் அன்புக்கு பாத்திரமாக இருப்பார்கள் விளையாட்டில் ஆர்வமிருந்தாலும் உடலுழைப்பு செய்ய சோம்பல் படுவதால் விளையாட்டில் தடம் பதிக்க யோசிப்பார்கள்.

#8

திருமண வாழ்க்கையில் அதீத இன்பம் வாய்க்காது. சண்டை சச்சரவுகளுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும். இயற்கை தொடர்பான விஷயங்களை அதிகம் நேசிப்பர். அதிக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.

#9

எந்த விஷயமாக இருந்தாலும் அதனை மனதில் தேக்கி வைக்கத் தெரியாது. அது நல்ல செய்தியாக இருந்தாலும் அல்லது மறைக்க வேண்டிய செய்தியாக இருந்தாலும் பொதுவில் சொல்லிவிட்டு பின் திண்டாடுவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பர்.

தன்னிடத்தில் எதாவது சோகம் ஏற்பட்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டாது அமைதிகாப்பர்.

#10

வாக்குவாதங்களை தவிர்ப்பது இவர்களுக்கு நல்லது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, வாக்குவதாத்தின் அடிப்படையான சாதுர்யப் பேச்சு மொழியறிவு இவர்களுக்கு சற்று குறைவு. அதோடு சட்டென அதிகமாக உணர்சிவசப்படுபவர்கள் என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது.

#11

தாய்மை பொறுப்பையும் மிக கச்சிதமாக செய்வார்கள். குழந்தைகளை மிகவும் பொறுப்பான வகையில் வளர்த்தெடுப்பார்கள். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பவராகவும், அவர்களை ஊக்கப்படுத்துபவராகவும் இருப்பர்.

இதனால் இவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

#12

அவ்வளவு எளிதாக தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்து விட மாட்டார்கள். தோற்கும் போதெல்லாம் இன்னும் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாமா என்பது தான் இவர்களது அடுத்த கேள்வியாக இருக்கும்.

இந்த குணங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் வாழ்வில் உயரமான இடத்தினை அடைவீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button