அழகு குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…ரெண்டுங்கெட்டான் வயதில் குழந்தைகளிடம் பெற்றோர் கூறக்கூடாத 7 விஷயங்கள்

வளரும் குழந்தைகள் ஒரு இடத்தில் அமைதியாக இருக்க மாட்டார்கள். பெற்றோரின் வேலைகளில் குறுக்கிட்டு நொடிக்கு, நொடிக்கு தொல்லை செய்வார்கள்.

தங்களுக்கு சம்மந்தமே இல்லாத விஷயங்கள் பற்றி நோண்டி, நோண்டி கேள்வி கேட்பார்கள். உங்கள் குழந்தையும் இதை எல்லாம் செய்தால் நீங்கள் கோபப்படக் கூடாது. மகிழ்ச்சியடைய வேண்டும்.

ஆம், வளரும் வயதில் உங்கள் குழந்தை இதை எல்லாம் செய்யாமல் மந்தமாக இருந்தால் தான் உடலில் ஏதோ கோளாறு என அர்த்தம். எனவே, உங்கள் குழந்தை செய்யும் தொல்லைகள், குறும்பு, தவறுகள் அனைத்திற்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

எது சரி, தவறு என புரியவைக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் சிறந்த தகப்பன் / தாயாகவும், உங்கள் பிள்ளை சமூகத்தில் அனைத்தும் அறிந்தும் வாழ முடியும்.

சொல் #1

தனியாக விடு!

ரெண்டுங்கெட்டான் வயதில் குழந்தைகளிடம் முதிர்ச்சியும் இருக்காது. குழந்தை தன்மையும் போயிருக்காது. எனவே, அவர்கள் அடம்பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

இந்த தருணத்தில் பெற்றோர்கள் அவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தங்களை தனியாய் விடு என கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. இது, அவர்களை மனதளவில் பெரியதாய் பாதிக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சொல் #2

கையாலாகாதவன்/ள்!

குழந்தைகள் வளர்ந்து வரும் தருவாயில் அவர்களை கையாலாகாதவன்/ள் என கூறுவதை தவிர்க்க வேண்டும். இது அவர்களின் தன்னம்பிக்கையை கொன்று, அவர்களே தங்களை எதுக்கும் உதவாத நபர் போல உணர வைக்கும்.

தவறுகள் செய்வது, தோல்வியடைவது எல்லாம் சகஜம். அதை ஊக்குவிக்கவும். அதில் இருந்து மீண்டு வரவும் தான் பெற்றோர்கள் உதவ வேண்டும்.

சொல் #3

அழுமூஞ்சி!

வளரும் வயதில் தாங்கள் செய்யும் தவறுகளை கண்டும், முயலாமை, அச்சம் காரணமாக குழந்தைகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

இதில் இருந்து மீண்டு வர பெற்றோர்கள் தான் தைரியம் அளிக்க வேண்டுமே தவிர. அழுமூஞ்சி என திட்டக் கூடாது.

சொல் #4

அவனை/ளை போல இரு…

எதற்கு எடுத்தாலும் மற்றவருடன் ஒப்பிட வேண்டாம். இது, அவர்களது தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை இழக்க வைக்கும்.

எனவே, எக்காரணம் கொண்டும், முக்கியமாக மற்ற நபர்கள் முன்னிலையில் ஒப்பிட வேண்டாம்.

சொல் #5

அடி வாங்க போற நீ…

வளரும் வயதில் தான் குழந்தைகள் பல விஷயங்களில் ஈடுபட நிறைய முயற்சிப்பார்கள். அப்போது தெரிந்தோ, தெரியாமலோ தஹ்வைருகள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சொல் #6

அதை செய்யாதே, இதை செய்யாதே…

வளரும் குழந்தைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால், அதுதான் தவறு. அவர்கள் எதையாவது செய்ய வேண்டும்.

அவர்கள் செய்யும் செயல்களில் இருக்கும் நல்லவை, கெட்டவை என்ன என்று பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

சொல் #7

தண்டச்சோறு….

வளரும் குழந்தைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என திட்ட வேண்டாம். துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை கண்டிக்க தான் வேண்டும்.

மேலும், ஆரோக்கியமான உணவை அவர்கள் தவிர்த்தல், அதன் முக்கியத்துவம் அறிய வைத்து சாப்பிட கூற வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button