ஆரோக்கியம் குறிப்புகள்

செய்வினை மற்றும் திருஷ்டி கழிக்க ஏன் எலுமிச்சை பயன்படுத்துகிறார்கள்?

செய்வினை, மாந்த்ரீகம்,திருஷ்டி போன்றவை குறித்து எல்லாருக்கும் ஒரு பயமிருக்கும். ஏற்கனவே அதனைப் பற்றி ஏராளமான கட்டுரைகளையும் நாம் படித்திருப்போம். பொதுவாக இது போன்ற மாந்திரீக விஷயமென்றாலே நிச்சயமாக இடம்பெறக்கூடிய ஒரு பொருள் எலுமிச்சை.

குறிப்பாக திருஷ்டி கழிக்க முதன்மையான பொருளாக எலுமிச்சை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். அதே போல தெருவில் கேட்பாரற்று கிடக்கும் எலுமிச்சையை தாண்டக்கூடாது என்றும் நம்மை பயங்கரமாக சிறுவயதில் எச்சரித்திருப்பார்கள். இப்படி செய்வினை,திருஷ்டி போன்றவற்றிற்கு எலுமிச்சையை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா? அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிம்பம் :

பொதுவாக இந்த செய்வினையின் போது எந்த நபருக்குச் செய்யவேண்டுமோ அவரை பிரதிபலிக்கக்கூடிய ஒரு பிம்பம் தேவைப்படுகிறது. அதற்கு சில பூஜைகளை செய்து கெட்ட சக்திகளை ஏற்றுவர்.

அப்படி செய்யும் போது எளிதாக அணுகும் விதத்திலும், கையடக்கமாவும் இருக்க எலுமிச்சை முதல் சாய்ஸாக இருக்கிறது.

இயற்கை சக்தி :

இயற்கையாகவே எலுமிச்சைக்கு கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அதிகம். குறைந்தது அரைமணி நேரத்திற்கும் மேலாக கெட்ட சக்திகள் சுற்றியிருக்கும் இடத்தில் எலுமிச்சை வைத்திருப்பதோ அல்லது திருஷ்டியைக் கழித்தாலோ அதன் சக்தி எளிதாக எலுமிச்சை கிரகத்துக் கொண்டுவிடும்.

இதனால் தான் தெருவில் கிடக்கும் எலுமிச்சை மிதிக்கவோ தாண்டவோ கூடாது என்று சொல்கிறார்கள்.

துர்தேவதை :

அமங்கலத்தின் நீட்சியாகவும் துர்தேவதைக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எலுமிச்சையின் வாசம் துர்தேவதைக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் துஷ்ட சக்திகளை ஏவவும், எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஊசி :

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த செய்வினைக்காக ஏவப்பட்டிருக்கும் எலுமிச்சை பழங்களில் பார்த்தால் ஒரு இடத்திலாவது ஊசியால் குத்தியிருப்பார்கள். துஷ்ட சக்தியை உள்நுழைக்கவோ அல்லது பிம்பமாக கருதப்படும் நபர் பாதிக்கப்பட வேண்டியோ இப்படி குத்தப்படுகிறது.

ஊசியால் குத்தும் வகையில் இலகுவான ஒரு பொருள் எலுமிச்சை. அதோடு மிகவும் எளிமையாக கிடைத்துவிடுகிறது. யாருக்கும் சந்தேகம் வராது, இதனை மறைத்து பாதுகாக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வாசலில் :

வீடு, கடை வாசலில் எல்லாம் எலுமிச்சை மற்றும் நான்கைந்து பச்சை மிளகாயை சேர்த்து கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். சிலர் தங்களது கனரக வாகனங்களிலும் இப்படி தொங்கவிட்டிருப்பார்கள். திருஷ்டி கழியும் என்று பொதுவான காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதற்கு பின்னால் இருக்கும் கதைகள் பல.

 

பிடித்தவை :

துர்தேவதையான அலட்சுமி நாம் இருக்கும் இடத்திற்குள் வந்தால் செல்வம் நிலைக்காது, அதோடு அதிர்ஷ்டமும் நமக்கு இல்லாது நிறைய துன்பங்களை சந்திக்க நேரிடும். இதனால் தாங்கள் இருக்கிற இடத்திற்கு துஷ்ட தேவதை வந்து விடக்கூடாது என்று வேண்டி இதனை கட்டுகிறார்கள்.

நம் வீட்டிற்கு வரும் துஷ்ட தேவதை வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கிற எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயின் வீரியத்தால் உள்ளே நுழைய முடியாது.

 

பசி :

துஷ்ட தேவதை பசியில் அலைந்து கொண்டிருக்கும்.ஏதேனும் சில காரணங்களால் நம் வீட்டிற்கு வர நேர்ந்தால் வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கும் எலுமிச்சையையும் மிளகாயையும் சாப்பிட்டு நகர்ந்து விடும்.

இதனால் துஷ்ட தேவதை நம் வீட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியும்.

 

ஆற்றல் :

அதோடு இவற்றிற்கு இருக்கக்கூடிய கிரகிப்புத் தன்மையால் பிறரால் ஏவப்பட்டு வருகிற கெட்ட சக்திகளை கிரகித்து அதன் தாக்கம் வெளிப்படாதவாறு பாதுகாத்திடும்.

பொதுவாக ஜனநடமாட்டம் அதிகமுள்ள கடைகளில் இப்படி வாசலில் எலுமிச்சை தொங்கவிடப்பட்டிருப்பதை நீங்கள் அதிகம் பார்க்கலாம்.

இதன் காரணம், பலரும் பார்த்து வியந்து திருஷ்டிப் படுவதால் அதன் வீரியம் நமக்கு வந்து விடக்கூடாது என்று சொல்லி அதனை கிரகித்துக் கொள்ள எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது.

 

அறிவியல் :

எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை மெல்ல அது ஆவியாக வெளிப்படுத்தும். அந்தக் காற்றினை சுவாசிப்பதால் நமக்கு நன்மைகள் உண்டாகும் நச்சு வாயுக்கள் நம்மை அண்டாது.

 

கிருமிநாசினி :

ஆம், எலுமிச்சையும், பச்சை மிளகாயும் மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வாசலில் இதனை தொங்க விடுவதால் திருஷ்டி காரணம் மட்டுமல்ல சில மருத்துவ காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

இவை இரண்டுமே மிகச்சிறந்த கிருமி நாசினி.இதனை வாசலில் தொங்க விடுவதால் எளிதில் பரவக்கூடிய நோய்க்கிருமிகள் நம்மை அண்டாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button