தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க…இந்த பழக்கங்கள் தான் தலையில் பொடுகு மோசமாவதற்கு காரணம்-ன்னு தெரியுமா?

நமது உடல் வெவ்வேறு காலநிலைகளுக்கு ஏற்ப வினைபுரியக்கூடியவை. அதில் குளிர்காலத்தில் காற்றின் நிலை காரணமாக உடல் வறட்சி மற்றும் ஈரப்பதத்தை இழக்கின்றன. இப்படி குளிர்காலத்தில் வீசும் வறண்ட காற்றின் காரணமாக, உடல் வினைபுரியும் ஒரு வழி சருமம் மற்றும் தலைச்சருமம் இரண்டும் வறட்சி அடைவது. அதில் சரும வறட்சி மற்றும் பொடுகுத் தொல்லை இரண்டும் தான் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளாகும்.

இவற்றில் பொடுகு உச்சந்தலையில் கடுமையான அரிப்பை உண்டாக்கும். இப்படி செதில்செதிலாக உச்சந்தலையில் இருந்து சருமத் துகள்கள் உடுத்தியுள்ள உடைகளில் உதிர்ந்திருப்பதைக் காணும் போது பலரது மனம் கஷ்டப்படலாம். வறண்ட காற்று பொடுகுக்கான அடிப்படை காரணியாக இருக்கும் போது, நாம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளால் அந்த பொடுகு மோசமாவதோடு, எளிதில் போகாதவாறு செய்துவிடும்.

கீழே ஒருவரது எந்த செயல்கள் பொடுகு நிலைமையை மோசமாக்கும் என கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அந்த செயல்களைத் தவிர்த்து பொடுகில் இருந்து விடுபடுங்கள்.

கடுமையாக உச்சந்தலையை தேய்ப்பது

தலையில் பொடுகு இருக்கும் போது, அதைப் போக்க சிறந்த வழி உச்சந்தலையை தீவிரமாக தேய்ப்பது அல்ல. உச்சந்தலையில் உள்ள தோல் மிகவும் எளிதில் உடையக்கூடியது. அப்படிப்பட்ட உச்சந்தலையை நகங்களால் தீவிரமாக தேய்க்கும் போது, இரத்தப்போக்கு அல்லது காயமடையக்கூடும். பொடுகு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உங்கள் உச்சந்தலையை எண்ணெயால் மசாஜ் செய்ய நினைத்தால், நகங்களுக்கு பதிலாக விரல்களைப் பயன்படுத்துங்கள். அதுவும், மென்மையாகவும், மெதுவாகவும் செய்யுங்கள்.

அடிக்கடி தலைமுடியை அலசுவது

தலைமுடியை அடிக்கடி அலசுவதால், உச்சந்தலை வறட்சியடைந்து, பொடுகுத் தொல்லையை அதிகரிக்கும். தலைமுடியை அடிக்கடி நீரில் அலசும் போது, தலைமுடியும், உச்சந்தலையும் இயற்கை எண்ணெயையும், ஈரப்பதத்தையும் இழந்து, அதிக வறட்சியை ஏற்படுத்தி, பொடுகை தீவிரமாக்கிவிடும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சரியான ஷாம்புவை பயன்படுத்தாமல் இருப்பது

பொதுவாக ஷாம்புவை தலைக்கு அடிக்கடி பயன்படுத்தினால், அது தலையில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் நீக்கிவிடும். அதிலும் தலையில் பொடுகு உள்ளது என்று கடைகளில் விற்கப்படும் பொடுகை எதிர்த்துப் போராடும் ஷாம்புவைப் பயன்படுத்தினால், அது தலையில் உள்ள பொடுகை போக்குவதற்கு பதிலாக அதிகரித்துவிடும். எனவே பொடுகு இருக்கும் போது, அதுவும் தீவிரமாக இருக்கும் போது, தோல் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் தயாரிப்புக்களைப் பயன்படுத்துங்கள்.

தலைமுடி பராமரிப்பு பொருட்களை அதிகம் பயன்படுத்துவது

தலைமுடி பராமரிப்பு பொருட்கள் பொடுகு பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும். ஏனெனில் இவற்றில் உள்ள கெமிக்கல்கள் தலையில் உள்ள ஈரப்பசையை நீக்கி வறட்சிக்கு வழிவகுக்கும். எனவே எந்த வகை தலைமுடி பராமரிப்பு பொருட்கள் பொடுகு பிரச்சனையை தீவிரமாக்குகிறது என்பதை புரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்திடுங்கள்.

சரியான உணவுகளை உண்ணாதிருப்பது

நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பானங்கள் கூட பொடுகை தீவிரமாக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல், போதுமான நீரைக் குடிக்காமல் இருந்தால், அது சருமம் மற்றும் தலைச்சருமத்திற்கு தேவையான சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்தை வழங்காமல்,அதன் விளைவாக தலைமுடி உடைதல் மற்றும் பொடுகிற்கு வழிவகுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button