மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பதால் ஒரு தாயின் மார்பகம் என்ன ஆகிறது?

ஒரு தாய், தன்னுடைய குழந்தைக்கு., தாய்ப்பால் கொடுக்கும்பொழுது அவளுடைய மார்பகத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டு காணப்படுவது வழக்கம். அவளுடைய மார்பகத்தின் அளவானது கர்ப்ப காலத்தின்போதோ…அல்லது தாய்ப்பால் தரும்பொழுதோ அதிகரிக்கிறது.

அவள் சந்திக்கும், இத்தகைய மாறுதல்கள் அனைத்திற்கு பின்னாடியும் ஒரே ஒரு காரணம் தான் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால்…தன்னுடைய குழந்தையின் பசியை போக்க அவள் உதவதுடிக்கும் ஒன்றே ஆகும்.

அவ்வாறு ஒரு தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் தரும்போது எத்தகைய நிலைகளை எல்லாம் கடந்து செல்கிறாள் என்பதனை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

உண்மை #1

கர்ப்பகாலத்தின் போது, அவளது மார்பகங்களில் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. முதலில் தாயின் முலைக்காம்புகளை சுற்றி சிறிய புடைப்பு தோன்றுகிறது. மேலும் முலைக்காம்புகளின் சருமத்தின் நிறம், கரு நிறத்திற்கு செல்லும். இதற்கான காரணம் என்னவென்றால், குழந்தைகள்…தன் தாயிடம் தாய்ப்பால் அருந்த தூண்டுவதற்கு இந்த கரு நிறம் தான் காரணமாம்

உண்மை #2:

தாயின் முலைக்காம்புகள் அருகே புடைக்க முக்கிய காரணம் என்னவென்றால், க்ரிஸ் என்னும் திரவம் உருவாகுவதனாலே ஆகும். இந்த திரவம் முலைக்காம்புகளை சுத்தப்படுத்துவதுடன், உராய்வையும் ஏற்படுத்துகிறது.

உண்மை #3:

தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் ஒரு தாய் உணரும் மற்றுமொரு பண்பு என்னவென்றால்…அவள் மார்பகத்தில் உணரப்படும் அமினோட்டிக் திரவத்தின் வாசமே ஆகும். அந்த வாசனை, தாயின் மார்பகத்தில் வீசுவதனாலே…அக்குழந்தை நுகர்ந்து தாயிடம் பால் அருந்த செல்கிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உண்மை #4:

எங்கிருந்து பால் வருகிறது? மார்பகத்தில் இருக்கும் சிறிய சுவாசபைகளின் கிளைகளின் மூலமாக தான் வருகிறது. ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன், உடம்புக்கு ஒரு சிக்னலை அனுப்பி பாலை உருவாக்க செய்கிறது.

உண்மை #5:

ஒரு தாய்க்கு முதலில் கொலஸ்ட்ரம் தான் சுரக்கிறது. இதில் அதிகளவில் புரதசத்து காணப்படுகிறது. மேலும் இந்த கொலஸ்ட்ரம், பாலை ஒத்திருக்கிறது. ப்ரோலாக்டின் செயல்பட தொடங்கியபின், தாயின் மார்பிலிருந்து பால் வெளிவர தொடங்குகிறது.

உண்மை #6:

இந்த முதல் நிலையில்…ஒரு தாயின் மார்பகங்கள் எரிவதனை போன்ற உணர்வினை பெறும். இது மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். சில பெண்களுக்கு…ஊசி குத்துவதனை போன்றதொரு உணர்வும், கூச்ச உணர்வும் தாய்ப்பால் தருகையில் உண்டாகிறது.

உண்மை #7:

தாய்ப்பால் தரும் முதல் நிலையில், சில பெண்களின் வயிற்றில் சுருக்கத்தையும் உணர்கிறார்கள். அது ஆக்ஸிடாஸின் காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button