மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பதால் இருதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையுமா?

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். தாய்ப்பால் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதாகவும் உள்ளது. ஆனால் தாய்ப்பால் கொடுப்பது தாயின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?

இதய பிரச்சனைகள்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என புதிய ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சீன தாய்மார்கள்

சீன தாய்மார்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த 290,000 பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அபயாம் 10% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது எவ்வாறு சாத்தியம்?

தாய்ப்பால் கொடுப்பதற்கும் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். நாம் இயற்கையாக செய்யும் எல்லா விசயங்களிலுமே நல்லது இருக்க தான் செய்கிறது. அதே போல தான் இந்த விஷயத்திலும்![penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் மெட்டபாலிசம் சீராகிறது. என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

வேறு என்ன பிரச்சனைகள் சரியாகும்?

நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இரத்த அழுத்தம் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆரோக்கியமான பழக்கம்

தாய்ப்பால் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கார்டிவாஸ்குலர் இருதய நோய்க்கான அபாயம் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வருடங்கள்

மற்றுமொரு ஆய்வில் ஒரு பெண் தனது வாழ்நாளில் குறைந்தது இரண்டு வருடங்களாவது தாய்ப்பால் கொடுப்பதினால் இருதய பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் குறைவதாக தெரிவித்துள்ளது.

நகரம் மற்றும் கிராமம்

நகரத்து பெண்களை விட மிக நீண்ட காலம் கிராமத்து பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதாக சர்வே முடிவுகள் கூறுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button