ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…பெண் குழந்தைகளிடன் தாய் இதை பற்றி எல்லாம் பேச தயங்க கூடாது!

தங்களது பெண் குழந்தைகளை சமூகத்தில் நல்ல மதிப்புடனும் திறமையுடனும் வளர்க்க ஒரு தாய் சில விஷயங்களை தனது பெண் குழந்தையிடன் பேச வேண்டியது அவசியம். உங்களுக்கு உங்கள் குழந்தைகளிடம் சில விஷயங்களை பற்றி பேச வெட்கமாகவும், கூச்சமாகவும் இருந்தால், தயவு செய்து உங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவற்றை தூக்கி எரியுங்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

உங்கள் குழந்தையின் வருங்காலம் சிறப்பாக அமைய நீங்கள் சில விஷயங்களை பற்றி வெளிப்படையாக உங்கள் பெண் பிள்ளைகளிடன் பேச வேண்டியது அவசியம். நீங்கள் எதை பற்றி எல்லாம் உங்களது பெண் குழந்தைகளிடம் மனம் திறந்து பேச வேண்டும் என காணலாம்.

வயதான அப்பாக்களின் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்களாம்! காரணம் என்ன?

1. காது கொடுத்து கேளுங்கள்

உங்களது பெண் குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் என்பதை சற்று காது கொடுத்து கேளுங்கள். அவரது பேச்சை தேவையற்றதாக கருதாதீர்கள். அவர்கள் பேசி முடித்தவுடன் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் தெரிவியுங்கள்.

2. நம்பிக்கை கொடுங்கள்

உங்கள் பெண் குழந்தைகள் நம்பிக்கையான சூழலில் வளர வேண்டியது அவசியம். பெண் குழந்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள். எடுத்தற்கெல்லாம் அவர்களை சந்தேகப்படாதீர்கள். பெண் குழந்தைகளிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியது அவசியம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

3. தாயாக இருங்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு தாயாக இருங்கள். அதையும் தாண்டி நண்பர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டாம். உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு உரிய வயதினரை தங்களாகவே நண்பர்களாக தேர்ந்தெடுத்துகொள்வார்கள்.

4. வாழ்க்கைமுறையை புரிந்து கொள்ளுங்கள்

குழந்தைகள் என்றைக்கும் உங்களது குழந்தைகளாகவே இருக்கமாட்டார்கள். அவர்கள் வளரும் போது தங்களுக்கென ஒரு வாழ்க்கைமுறை, ஸ்டைல்களை அமைத்துக்கொள்வார்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை நினைத்து கவலைப்பட தேவையில்லை.

5. மரியாதை கொடுக்க சொல்லி கொடுங்கள்

குழந்தைகள் பிறக்கும் போதே அனைத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. பிறரை மதிக்கவும், அனைவருக்கும் மரியாதை தரவும் நீங்கள் தான் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

6. சுயமரியாதை

சுயமரியாதை என்பது தன்னை தானே உயர்வுபடுத்தி நினைப்பது. பெண்களுக்கு சுயமரியாதை கட்டாயம் இருக்க வேண்டும். அடிமைத்தனமாக இருப்பது, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை இது போக்கும். மற்றவர்கள் நமக்கு மரியாதை கொடுக்கும் முன் நம்மை நாமே மதித்து நடந்து கொள்வது வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button