சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் வீட்டில் இருந்தபடியே மெனிக்யூர் செய்வது எப்படி எனத் தெரியுமா

இந்த நவீன உலகத்தில் நம் உடலை அழகுபடுத்த ஏராளமான பராமரிப்பு முறைகளும் தெரபிகளும் வந்த வண்ணம் உள்ளனர். அதில் ஒன்று தான் இந்த நகப் பராமரிப்பு முறை. எல்லா பெண்களும் விரும்பி அழகுபடுத்தும் இந்த நகப் பராமரிப்பு முறை தான் இப்பொழுது பிரபலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த நகப் பராமரிப்பு செய்ய ஒவ்வொரு பெண்களும் சலூன் சென்று நீண்ட நேரம் காத்திக் கிடக்க வேண்டிய நிலையும் இருக்கிறது. மேலும் இதனால் அதிகமான செலவு மற்றும் நேர விரயமும் நமக்கு ஏற்படுகிறது.

எனவே தான் நாங்கள் வீட்டிலேயே உங்கள் நகங்களை நீங்களே அழகுபடுத்தும் எளிதான முறையை கூற உள்ளோம். இதற்கான பொருட்கள் அனைத்தும் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கின்றன. உங்கள் அழகான விரல்கள் மற்றவர்கள் பார்வையை சுண்டி இழுக்க வேண்டாமா? கவலையை விடுங்க அதற்கு நாங்கள் கூறும் டிப்ஸ்களே போதும்.இனி மணிக்கணக்கில் பார்லர் சென்று காத்திருக்க வேண்டிய தேவையில்லை. நீங்களே உங்கள் வீட்டிலேயே அழகான நகப் பராமரிப்பை பெற இயலும்.

நகம் வெட்டும் கருவியை பயன்படுத்துதல்

முதலில் நகம் வெட்டும் கருவியை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நகத்தை வெட்டிக் கொள்ளுங்கள். நகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதும் முக்கியம். ரெம்ப நீளமான நகங்களை நீங்கள் வைக்க நினைத்தால் அது எளிதில் உடைவதற்கு வாய்ப்பு அதிகம். மேலும் அதை பராமரிக்க தனிக் கவனம் தேவை. எனவே மீடியமான வடிவத்தில் நகத்தை வெட்டிக் கொள்ளுங்கள்.

மேல் தோல் எண்ணெய் பயன்படுத்துங்கள்

நகங்களை வெட்டிய பிறகு அதன் மேல் தோலில் க்யூட்டிகள் ஆயில் அல்லது எதாவது ஒரு எண்ணெய்யை தடவுங்கள். இது நகரத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் எஸன்ஷியல் ஆயில் சேர்த்தும் பயன்படுத்தி கொள்ளலாம். உங்கள் வீட்டில் இருக்கும் அரோமேட்டிக் எண்ணெய்களை கூட பயன்படுத்தலாம்.

நகங்களை நனையுங்கள்

நகத்திற்கு எண்ணெய் மூலம் போதுமான ஈரப்பதம் கொடுத்ததும் கைகளை நனைக்க வேண்டும். ஒரு பெளலில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளுங்கள். இதில் எஸன்ஷியல் ஆயில் அதாவது லாவண்டர் போன்ற ஆயிலை யும் கலந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் விரல்களை இந்த கலவையில் நனைய விடுங்கள். நகங்களின் மேல்தோல் மென்மையாகி அமுக்கினால் பழைய நிலைக்கு வரும் வரை நனைய விடுங்கள்.

ப்ரஷ்

இப்பொழுது ப்ரஷ் மற்றும் க்யூட்கள் ஸ்டிக் கொண்டு மேல் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்குங்கள். க்யூட்டிகள் ஸ்டிக்யை பயன்படுத்தும் கவனமாக உபயோகிங்கள். ப்ரஷ்யின் மென்மையான பற்களை கொண்டு மெதுவாக கைகளை தேயுங்கள். இப்பொழுது நகங்கள் நன்றாக தூய்மையாக இருக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மாய்ஸ்சரைஸ்

நீங்கள் இறந்த செல்களை நீக்கிய பிறகு நெயில் க்ரீம் அல்லது மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இதற்கு பதிலாக நீங்கள் பேஸ் மற்றும் பாடி மாய்ஸ்சரைசர் கூட பயன்படுத்தி கொள்ளலாம். கைகளுக்கு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்வது முக்கியம். ஏனெனில் நமது உடலில் உள்ள சில பகுதிகள் தானாக இயற்கையாக எண்ணெய்யை சுரக்காது. எனவே அந்த பகுதிகளுக்கு போதுமான ஈரப்பதத்தை நாம் தான் அளிக்க வேண்டும்.

நகங்களின் முனையை வடிவமாக்கும் கருவி

இப்பொழுது நகங்களின் முனையை வடிவமாக்கும் கருவியை கொண்டு கூர்மையான முனைகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க வேண்டும். வட்டம், பாதாம் பருப்பு வடிவம், சதுர வடிவம் இப்படி உங்கள் விருப்பத்திற்கு தகுந்த வடிவத்தை செய்து கொள்ளுங்கள். சதுர வடிவ நகங்கள் பார்ப்பதற்கு புதுவிதமான அழகை கொடுப்பதோடு உடையாமல் இருக்கும்.

பேஸ் கோட் தடவ வேண்டும்

நகங்களை வடிவமாக்கிய பிறகு முதலில் கண்ணாடி மாதிரி இருக்கும் நெயில் பேஸ் கோட்டிங்கை அப்ளை செய்ய வேண்டும். அப்பொழுது தான் பிறகு எந்த நெயில் பெயிண்ட்டிங் செய்தாலும் அழகாக கச்சிதமாக பொருந்தும். மேலும் நெயில் பாலிஷ் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். நிறைய வகை நெயில் பேஸ் கோட் பொருட்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. உங்கள் நகங்கள் அடிக்கடி உடைந்தாலோ, வலுவில்லாமல் இருந்தால் அதற்கும் இந்த பேஸ் கோட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.

நெயில் பாலிஷ் செய்தல்

இப்பொழுது நிறைய நெயில் கலரிங், நெயில் ஆர்ட் பொருட்கள் கிடைக்கின்றன. அடர்ந்த நிறங்கள், கண்ணாடி மாதிரியான நிறங்கள் போன்றவற்றில் உங்கள் விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுத்து கலரிங் செய்து கொள்ளுங்கள். அழகான நகப் பராமரிப்பு முறை கிடைத்து விடும்.

இந்த டிப்ஸ்களை பின்பற்றி அழகான நகப் பராமரிப்பு முறையை எந்த வித செலவும் இல்லாமல் வீட்டிலேயே செய்து ரசியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button