ஆரோக்கியம் குறிப்புகள்

உடல்நலத்திற்கு கேடு தரும் நாப்கின்கள்

இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்தபோது பல உண்மைகள் புரிந்தது. இந்த நாப்கின்களில் மறுசுழற்சி

செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நான்கு லேயர்களைக்

கொண்ட நாப்கினில் முதல் லேயர். சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது.

இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், முன்றாவது லேயர் ஜெல் (பெட்ரோலியப் பொருளால்

தயாரானது) கீழ் லேயர். பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை.

இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் இரசாயனம் இருப்பதுடன் ஹைப்போ குளோரைட் என்ற

வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது.

பெண்கள் இதைப் பயன்படுத்தும் போது நுண்ணிய துகள்களாகப்

படிந்திருக்கும் இந்த இரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டையாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது.

புற்று நோய்க்கான மூலக் காரணிகளில் இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர இத்தனை இரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப்

பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சினை, வெள்ளைபடுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய்

புற்று நோய் என்று பல பிரச்சினைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.

நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு அவை பேக்கிங் செய்து அனுப்பப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவலைக்குரிய

விடயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன்னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர,

காலாவதி நாள் என்பது குறிப்பிடப்படுவதில்லை.

இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும் 45 வயது வரை மாதத்தில்

மூன்று நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க

நேரிடுகிறது. இரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினைத் தொடர்ந்து உபயோகிக்கும் போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க

முடியாததாகிறது.

முன்பெல்லாம் நாப்கின்களுக்கு பதில் துணியை பயன்படுத்தினார்கள்.

ஆனால், அதில் உள்ள சுத்தம் சந்தேகத்துக்குரியதே. அப்படி

பார்க்கும் போது நாப்கின்கள் நான்கு மணி நேரத்துக்கு பிறகு தூக்கி எறிந்து விடப் போகிறோம் என்பதால் பிரச்சினை இல்லை.

பொதுவாக இன்ஃபெக்ஷன் ஆவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். அதுகூட, தொடர்ந்து ஒரே நாப்கினை பயன்படுத்தும்போதுதான்

ஏற்படும். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை. மற்றபடி எந்த முறையில் சுத்திகரிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதுதான்.
13012

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button