மருத்துவ குறிப்பு

பாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

கசப்பு என்பதால் பாகற்காயைத் தொடாத பெண்களா நீங்க? இனி, மாறுங்க. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் கடந்த 1982ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அல்சர் ஆகிய நோய்களை பாகற்காய் கட்டுப்படுத்தும் என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் நோய் இயல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரத்னா ராய், மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் பாகற்காயின் பங்கு குறித்து ஆய்வு செய்தார். இதன் முடிவுகள் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் சாறு வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்ததில் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை கொல்வதில் பாகற்காய் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. மேலும், இந்த செல்கள் வளர்ச்சி அடைவதைத் தடுக்க உதவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

”பெண்கள் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கவும் அதன் வேகமான வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும்” என ரத்னா ராய் தெரிவித்துள்ளார்.

”பெண்களை பலிவாங்கும் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான இந்த ஆராய்ச்சி மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என கொலராடோ பல்கலைக்கழகத்தின் மருந்து அறிவியல் துறை பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ld356

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button