மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா குழந்தை பிறந்த பின் பெண்கள் சந்திக்கும் சில முக்கியப் பிரச்சனைகள்!

பிரசவ அறையில் பல மணி நேர ஜீவ மரண போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து வந்திருக்கும் பெண்கள் ஏராளமான சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும் பிரசவ வலியையும் தாண்டி கடந்த ஒன்பது மாதங்களாக தனக்குள்ளே இருந்து வளர்ந்த உயிர் இது என்று அந்த குழந்தையின் முகத்தை பார்க்கையில் அத்தனையும் மறந்துவிடும்.
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளைப் பற்றிய தொகுப்பு தான் இது.

தூக்கம் :

நீங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இது இருக்கும். உடல் கலைத்துப் போய் அசதியாய் இருக்கும். ஆனால் மனம் தூக்கம் கொள்ளாது. தொடர்ந்து பார்க்க வருகிறவர்களாக இருக்கலாம், குழந்தையின் அழு குரலாக இருக்கலாம், உடல் வலியாக இருக்கலாம்.

செக்கப் :

தொடர்ந்து செக்கப் சென்று கொண்டேயிருக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவேளியில் தொடர்ந்து செக்கப் சென்று வருவது அவசியம். குழந்தையை தனியாக வைத்திருக்க வேண்டிய சூழல் வந்தால் இன்னும் சிரமம்.

உங்களுக்கு கெஸ்டேஷனல் டயப்பட்டீஸ் இருந்தால் தொடர்ந்து உங்களது ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்வது அவசியம்.

பாப்பா :

குழந்தையின் முதல் அழுகுரல் உங்களுக்கு ஆனந்தத்தை கொடுக்கும் மகிழ்ச்சியின் எல்லையில் கொண்டு போய் வைத்திடும். ஆனால் சில நேரங்களில் உங்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் அவர்களுக்கான கம்ஃப்ர்ட்டபிள் இடம் சூழல் கிடைக்காவிட்டால் அழுது கொண்டேயிருப்பார்கள்.

புது உலகம் :

இதுவரை இருந்த உலகத்திற்கும் இப்போது அவர்கள் உணரும் உலகத்திற்கும் அதிகப்படியான வேறுபாடுகள் உண்டு. புது வாசம், புது தட்பவெட்பம் என்பதில் துவங்கி மூச்சு விடுவது, தாய்ப்பால் குடிப்பது என குழந்தை சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தாய்க்கும் ஓர் பங்குண்டு.

தாய்ப்பால் :

முதன் முதலாக தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய்க்கும், குழந்தைக்கும் சில அசௌகரியங்கள் ஏற்படுவதுண்டு. முதல் முயற்சியில் குழந்தைக்கு பல் கொடுக்க முடியவில்லை அல்லது குழந்தையால் குடிக்க முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். எளிதில் உங்களுக்கு பழகிடும். குழந்தையும் பழக்கப்பட்டு விடும்.

எமோஷனல் :

என்ன தான் நீங்கள் தைரியமிக்க பெண்ணாக இருந்தாலுமே. குழந்தை பிறந்த எமோஷனலான விஷயத்தை உணர்வுப்பூர்வமாகத்தான் அணுகுவார்கள். அதோடு ஹார்மோன் மாற்றங்களினால் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டவராகவே காணப்படுவர்.

கழிவறை :

பிரசவம் நடந்த பிறகு பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று இந்த கழிவறைப் பிரச்சனை தான். சுகப்பிரசவமாக இருந்தால் சிறு நீர் கழிக்கும் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். சிசேரியன் செய்யப்பட்டிருந்தால் ஒவ்வொரு முறை எழும் போதும் உட்காரும் போதும் தையல் பிரிந்து விடுமா என்கிற பயம் இருந்து கொண்டேயிருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button