பெண்கள் மருத்துவம்

பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.

இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களின் உடலுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கென்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வேலைக்கு செல்வதால், அவர்களது வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை முற்றிலும் மாறுபடுகிறது. இதனால் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைகிறது. ஆகவே அத்தகையவர்கள் தாம் உண்ணும் உணவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது அவர்கள் என்னென்ன உணவுகளை தினமும் உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று பார்ப்போமா!!!

பிராக்கோலி: நல்ல பச்சை காய்கறிகளை தினமும் சாப்பிட்டாலே, ஆண்களானாலும், பெண்களானாலும், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பிராக்கோலி சாப்பிட்டால், புற்றுநோய், முதுமை தோற்றம் மற்றும் இதய நோய் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. மேலும் சரும சுருக்கத்தை தடுக்கும் பீட்டா கரோட்டீன் இதில் உள்ளது.

சாலமன்: அசைவ உணவு மிகவும் பிடிக்கும் என்றால், அவர்களுக்கு சாமன் மீனும் மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த மீனில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் இருக்கிறது. இது புற்றுநோயை தடுத்தல், தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்தல் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதை சாப்பிட்டால், மார்பக புற்று நோய், அல்சீமியர் நோய் மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

காலிஃப்ளவர்: இந்த காய்கறியில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி9 இருக்கிறது. இந்த காயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இதில் போலிக் ஆசிட் இருக்கிறது. மேலும், இதில் ஊட்டச்சத்துக்களைத் தவிர, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் இருக்கிறது. அது எளிதில் செரிமானமடைந்துவிடும். இதுவும் இதயத்திற்கு நல்லது.

பெர்ரிஸ்: இந்த சிட்ரஸ் பழம் சுவையாக மட்டும் இருப்பதில்லை, உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கக்கூடியது. இந்த பெர்ரி பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. உதாரணமாக, ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவை. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், டியூமரை எதிர்த்து போராடும். மேலும் இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மார்பக புற்றுநோய், எடை குறைதல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

தயிர்: டயட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் கண்டிப்பாக பால் பொருட்களை சேர்க்க வேண்டும். அதிலும் தயிர் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் நொதிப் பொருட்கள் இருக்கின்றன. இதனால் உடலில் செரிமான அதிகமாவதோடு, உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறும். மேலும் இவற்றை சாப்பிட்டால், சருமம் நன்கு அழகாக காணப்படும்.

மேற்கூறிய அனைத்து உணவுப் பொருட்களையும் பெண்கள் தங்கள் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எந்த நோயும் விரைவில் அண்டாமல் இருக்கும்.
8 tips for a healthy diet for women

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button