ஆரோக்கியம் குறிப்புகள்

படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சரியான நேரத்தில் தூக்கம் வருவது இல்லை.

தூக்கம் வர வில்லை என்பதற்காக நாம் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளில் ஈடுப்பட கூடாது.

தூக்கத்திற்கும் மனித ஆயுலுக்கும் தொடர்பிருக்கின்றது. ஓய்வு என்பது அனைவரது உடலுக்கும் தேவையான ஒன்று. இதற்கு நாம் சில விடயங்களை கடைப்பிடித்தாலே போதும்.

 

  1. நீண்ட ஓய்வில்லா நாளின் இறுதியில் சூடான நீரில் குளியல் மேற்கொள்ளலாம். இது உடலுக்கு நிம்மதி அளிப்பதுடன், உறக்கத்தை வரவழைக்கவும் உதவுகிறது.
  2. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சூடான நீரில் குளிக்கலாம்.
  3. உடலையும், மனதையும் அமைதி அடையச் செய்ய மசாஜ் சிறந்த சிகிச்சை ஆகும். இரவு நேரத்தில் மசாஜ் செய்வதால், வலி குறைந்து, பதற்றம் மற்றும் மன அழுத்தம் குறைகிறது.
  4. மேலும் ஆழ்ந்த தூக்கமும் வரும். நீங்களாகவே வீட்டில் மசாஜ் செய்து கொள்ளலாம். உணர்வுகளை தூண்டி, சிறந்த தூக்கம் அளிக்க லாவெண்டர் ஆயில் உதவுகிறது.
  5. பாலும், தேனும் சேர்ந்த கலவை தூக்கத்தை வரவழைக்க சிறப்பான மருந்து. பாலில் அமினோ அமிலம், டிரிப்டோபான் உள்ளது.
  6. இது ஹார்மோன் அளவை அதிகரித்து, இயற்கையான உத்வேகம் அளிக்கிறது. இரவில் தூங்க செல்லும் முன், கொஞ்சம் மூலிகை டீ எடுத்துக் கொண்டால் தானாக தூக்கம் வரும்.
  7. இது உடலை சாந்தமடைய செய்கிறது. மேலும் பேஷன்பிளவர் டீ மற்றும் சமோமைல் டீ போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
  8. உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தாது மக்னீசியம் ஆகும். இது உடல் தசைகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்கிறது.
  9. இரவில் எளிய உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
  10. உறங்கும் முன் லேப்டாப், டி.வி., மொபைல் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button