மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா?

தாய்மை என்பது அனைத்து பெண்களுக்குமே முக்கியமானதுதான். ஆனால் இது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு பிரசவமும் பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. இது அவர்களின் உடல் வலிமையை பொருத்து எளிதாகவும், கடினமாகவும் இருக்கும்.

பெண்ணுக்கு குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்குமா அல்லது சிசேரியனில் பிறக்குமா என்பது யாராலும் யூகிக்கமுடியாத ஒன்று.

பெண்களின் பிரசவம் என்பது அவர்கள் சாப்பிடும் உணவு, அவர்களுடைய ஹீமோகுளோபினின் அளவு, அவர்களின் மனவலிமை என பலவற்றை பொருத்து அமைகிறது. பிரசவத்தில் பெண்களின் உயரமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. உயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு பிரசவத்தின் போது சில சிக்கல்கள் ஏற்படலாம் என சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. உயரம் குறைவான பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சினைகளையும், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே பார்க்கலாம்.

உயரம்

நீங்கள் உயரம் குறைவாக இருந்தால் உங்கள் குழந்தையும் உயரம் குறைவாகத்தானே இருப்பார்கள். உயரம் குறைவாக இருந்தால் பரவாயில்லை, வயிற்றில் இருக்கும் காலமே குறைவாய் இருந்தால் என்ன பண்ணுவது. ஆம் உயரம் குறைவான பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். உயரம் மட்டுமின்றி பெண்களின் வயது, ஊட்டச்சத்து குறைவு என பல காரணங்கள் குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க காரணமாய் அமைகிறது. மருத்துவர்களை பொருத்தவரை ஐந்து அடிக்கு குறைவானவர்கள் உடலளவில் குழந்தை பெற்றுக்கொள்வது சிரமம் என கூறுகின்றனர்.

குறைப்பிரசவம்

உயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு ஏற்படும் முக்கிய சிக்கல் குறைபிரசவம்தான். முப்பத்தேழு வாரங்களுக்கு முடிவடைவதற்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் உயரம் குறைவான பெண்களுக்கு அதிகளவில் குறைப்பிரசவம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

செபலோபெல்விக் குறைபாடு

உயரம் குறைவான பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சினை குழந்தையின் தலை சரியாக அம்மாவின் பிறப்புறுப்பு நோக்கி இல்லாதது. இதனை மருத்துவர்கள் செபலோபெல்விக் குறைபாடு என்று கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் குழந்தையின் தலை வெளியே வருவது மிகவும் சிரமம். ஏனெனில் மற்ற பெண்களை காட்டிலும் உயரம் குறைவான பெண்களின் இடுப்பெலும்பின் அளவானது குறைவாக இருக்கும்.

மகப்பேறு புழை

மகப்பேறு புழை என்பது பெண்ணின் யோனிக்கும், சிறுநீர் செல்லும் பாதைக்கும் இடையே உள்ள துளை ஆகும். இது இரண்டு உறுப்புகளையும் பிரிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒருவேளை குழந்தை பெரியதாக இருந்தால் பிரசவத்தின் போது அம்மா அதிக அழுத்தம் கொடுக்க நேரிடலாம் அந்த சூழ்நிலையில் அம்மாவிற்கு திசு சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த மகப்பேறு புழை பிரசவத்தின் போது அதிகளவில் உயரம் குறைவான பெண்களுக்கே ஏற்படுகிறது.

அதிக இரத்தப்போக்கு

குழந்தை வெளியே வருவதற்கு மற்ற பெண்களை விட உயரம் குறைவான பெண்கள் அதிகளவு அழுத்தம் தர வேண்டியிருக்கும், ஏனெனில் அவர்களின் கருப்பையின் அளவு மிகவும் சிறியதாக இருக்கும். இது யோனியின் திசுக்களை அதிகளவில் பாதிப்பதோடு அதிக இரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்புகளை உண்டாக்குகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எபிசோடாமி

எபிசோடாமி என்பது பயப்படும் அளவிற்கு பெரிய பிரச்சினை அல்ல. பிரசவத்தின்போது குழந்தையின் தலையை வெளியே கொண்டுவர பெண்ணின் யோனி மற்றும் குதத்திற்கு இடையே ஒரு சின்ன இடைவெளி ஏற்படுத்தப்படும். உயரம் குறைவான பெண்களுக்கு இது செய்யப்படும்போது அதிக ஆழமாக செல்வதுடன் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும் பிரச்சினையும் இருக்கிறது.

குழந்தை உயரம் மற்றும் எடை

கருப்பை மற்றும் இடுப்பெலும்பின் அளவுகள் சிறியதாக இருப்பதால் குழந்தை வளர்வதற்கு போதுமான இடம் இருக்காது, இதன் விளைவு எடை குறைவான குழந்தை. இந்த சிக்கல் குழந்தையின் எடையில் மட்டுமின்றி சில சமயம் குழந்தையின் உயரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கருச்சிதைவு

நீண்டகால கர்ப்பம் காரணமாக கருவில் உள்ள குழந்தையானது கருப்பையில் இருக்க மிகவும் அசௌகரியமாக உணர வாய்ப்புகள் அதிகம், மேலும் கருப்பையின் அளவு சிறியதாக இருப்பதால் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம். இது கருச்சிதைவை கூட ஏற்படுத்தும். ஆனால் பயம் கொள்ள தேவையில்லை இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு.

கர்ப்பகால பிரச்சினை

சாதாரண நாட்களில் நீங்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்துகொள்ளலாம். ஆனால் வயிற்றில் குழந்தை இருக்கும்போது அணியும் ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும். உயரம் குறைவானவர்கள் அவர்கள் உயரத்திற்கு ஏற்ற உடை அணியும்போது அது உங்கள் வயிறை முழுமையாக மூடாது. வயிற்றையும் சேர்த்து நீங்கள் ஆடை அணிய விரும்பினால் மற்ற இடங்களில் தளர்வாகவும், உயரம் மிக அதிகமாகவும் இருக்கும். கர்ப்ப காலத்தில் சரியான ஆடை அணிவதே உங்களுக்கு பெரிய சவாலாய் இருக்கும்.

எவ்வாறு சமாளிக்கலாம்?

இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் உயரம் என்பது பிரசவத்தை நிர்ணயிக்கும் காரணிகளுள் ஒன்றுதானே தவிர அது மட்டுமே முக்கியமானதல்ல. உயரத்திற்கு நீங்கள் ஒன்றும் செய்ய இயலாது ஏனெனில் அது மரபணுக்களில் இருந்து வருவது, ஆனால் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் உங்கள் குழந்தையின் உயரம் மற்றும் எடை குறைவதை உங்களால் தடுக்க இயலும். எனவே கடினமானதை நினைத்து கவலை கொள்ளாமல் உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு அவர்களுக்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்து பிரசவத்தை எளிதாக்குங்கள். ஏனெனில் இங்கு உயரம் குறைவாக இருந்தும் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று மகிழ்ச்சியாய் வாழும் எத்தனையோ பெண்கள் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button