ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? வயதிற்கு வந்த பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும்?

குழந்தைகளை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியது முக்கியம். நாம் எந்த அளவுக்கு அவர்களின் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ அவர்கள் சரியான பாதையில் செல்ல முக்கிய பங்கு வகிக்கும்.

ஆனால், சில பெற்றோர்கள் சிறுவயது வரை குழந்தைகளை கவனித்துவிட்டு, டீனேஜில் கவனிக்க தவறிவிடுகின்றனர். இதனால், பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சில குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை விமர்சிப்பதை விட, அவர்களின் கனவுகளைத் தொடர அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.

அவர்களின் சிறிய முயற்சிகளை பாராட்ட தவறவிடக்கூடாது. உங்கள் பிள்ளையை மதிய உணவு அல்லது பிக்னிக்குகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்குங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதை ஒரு பழக்கமாக வைத்து, அதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். மேலும், அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் எதிர்கால திட்டத்தைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள்.

அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள், அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் ஏதாவதொரு பிரச்சனையுடன் உங்களிடம் வந்தால், அவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள்.

முக்கியமாக உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள், எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக அவர்களிடம் தெரிவியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button