ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் 1ம் எண்ணில் பிறந்தவரா? கட்டாயம் இதை படியுங்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டு கூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ம் தேதி நடுத்தரப் பலன்களே. 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பல நல்ல பலன்கள் தானே வரும். ஆனால் நாம் தேடிச் சென்றால் தலைகீழ பலன்களே ஏற்படும். 2, 7, 11, 16, 20, 25, 29 தேதிகளில் ஓரளவு நல்ல பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

1. தங்க மோதிரம், ஆபரணங்கள் அணிவது நன்மை தரும்.
2. மாணிக்கம், புஷ்பராகம், மஞ்சள் புஷ்பராகம் அணிவது மிக்க நலம் தரும்.
3. சிவப்பு இரத்தினத்தில், சூரிய காந்தக்கல் ஆகியவையும் மிக்க நன்மை தரும்.

 

அதிர்ஷ்ட நிறங்கள்

பொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம் ஆகிய நிறங்களும் நன்மை தரும். கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகளையும் வர்ணங்கள் உபயோகங்களையும் தவிர்க்க வேண்டும்.

 

நண்பர்கள்

இவர்களுக்கு 1, 2, 3, 4, 5, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்தான் நல்ல கூட்டாளிகளும், நண்பர்களாகவும் இருப்பார்கள்.

 

திருமணம்

இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.

திருமண தேதி

 

1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும். (இவர்களுக்குத் தேன் மிகவும் சிறந்தது. அடிக்கடி உணவில் தேனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொன்னாங்ககண்ணிக் கீரையும் மிகவும் ஏற்றது. கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் பித்த நீர் ஓட்டம் சமப்படும். நோய்களின் கடுமை குறைந்து வரும். இயற்கை வைத்தியத்தில்தான் இவர்களது நாட்டம் செல்லும்.)[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

 

வேண்டாத நாட்கள்

8, 17, 26 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 8 வரும் எண்கள் நாட்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தோல்வியே ஏற்படும். இவர்களுக்கு மக்கட்பேறு உண்டு.

நோய்களின் விபரங்கள்

 

சூரியன் ஒரு நெருப்புக் கோளம். இதனால் இந்த எண்காரர்கள் பெரும்பாலும் வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள். மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகும். பித்த நீர் ஓட்டம் மிகுந்துவிடும். எனவே, இரத்த ஓட்டம் சம்பந்தமான பலவித நோய்களும் குறைபாடும் உண்டாகும். கண் பார்வை குறைபாடுகளே பெரும்பாலும் இவர்களுக்கு ஏற்படும். பல அன்பர்களுக்கு அடிக்கடி தலைவலியும் ஏற்படும். அடிக்கடி கண்ணாடிகளை மாற்றிக் கொள்வார்கள். இரத்தக் கொதிப்பு, சீரணக் கோளாறுகள், படபடப்பு ஆகியவையும் ஏற்படும். பித்த சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். எனவே இவர்கள் பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

காரம், புளிச்சுவையையும், சீரணத்தை மந்தப்படுத்தும் உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, ஆரஞ்சுப்பழம், சாதிக்காய், இஞ்சி, பார்லி ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முன்பே சொன்னபடி தேனைத் தினந்தோறும் உண்டு வந்தால் மிக்க நலம்பெற்று வாழ முடியும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button