ஆரோக்கியம் குறிப்புகள்

ஒரு தேங்காய் போதும்… பூமிக்கடியில் தண்ணீர் எங்க அதிகம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்…தெரிஞ்சிக்கங்க…

இந்திய வேளாண்மை முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை.

பழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட

பழங்கால அறிஞர்கள்

பழங்காலத்தில் மனு, சரஸ்வத் போன்றவர்கள் மிகத் துல்லியாமாக பூமிக்கடியில் இருக்கும் நீர்வழித் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டிருந்தனர். அதற்கடுத்ததாக வந்த வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட் சம்ஹிதா என்ற புத்தகத்தில் 54-வது அத்தியாயத்தில் 125 வசனங்கள் மூலம் நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பதை பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். இவர் தன்னுடைய அத்தியாய வசனத்தில் பூமிக்கு அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்கும் முறையினைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைப்பொருள்கள்

இயற்கைப் பொருள்களாக மரங்கள், மலைகளில் உள்ள எறும்புகள் அதன் புற்றுகள், பாறைகள், பாறைகளின் நிறம் மற்றும் மண்ணின் இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நீர்வழித் தடங்களைக் கண்டறிய முடியும் என்கிறார்.

வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை பல்வேறு திசைகள் கொண்டு சுட்டிக் காட்டியுள்ளார். அத்திசைகளுக்கு பழங்காலத்தில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றியும் தெரிவித்துள்ளார்.

மருதமரம்

மகாபாரதத்தில் அர்ஜுனர், பீஷ்மர் மீது அம்பு எய்து அவரை அம்பு படுக்கையில் சாய்த்த போது அவருக்கு தாகம் எடுத்தது. அவருடைய தாகத்தை போக்க அர்ஜுனர் பூமியில் ஓர் அம்பை எய்தார் அப்போது பூமியில் இருந்து தண்ணீர் மிக வேகத்துடன் வெளியேறி அவருடைய தாகத்தை தீர்த்தது. அந்த இடத்தில் மருத மரம் வளர்ந்தது. இது வெறும் புராணக்கதை மட்டுமல்ல. அறிவியல்ரீதியான உண்மையும் கூட. அதனால் தற்போதும் மருத மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நாவல் மரம்

நாவல் மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நீர் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும். ஏனென்றால் இந்த மரத்தின் வேர் பகுதிகள் மழைகாலங்களில் பெய்யும் தண்ணீரை தனக்குள் ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர்.

எறும்பு புற்றுகள்

மேலும் புற்றுகள் உள்ள பகுதிகள் மற்றும் வெள்ளை நிற தவளை (தேரை) இருக்கும் இடங்களிலும், வெள்ளை நிற பூக்கள் கொண்ட காட்டு மரங்கள் வளரும் பகுதிகளிலும் கண்டிப்பாக நிலத்தடிநீர் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

வேறு சில மரங்கள்

மருதம் மற்றும் நாவல் மரம் மட்டுமல்லாது, அத்திமரம், கடம்ப மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலுமரம், புளியமரம், மருத மரம், வேம்பு மரம், வில்வம் போன்ற மரங்கள் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென் இந்தியா

நம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில் தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் ஆய்வறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேங்காய்

இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம். மிக எளிமையாக நம்முடைய வீட்டில் உள்ள தேங்காயை வைத்தே பூமிக்கு அடியில் ஓடும் நிலத்தடி நீர்த்தடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

டாடா சோசியல் சயின்ஸ் அமைப்பு

மிக சுலபமான முறையில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகளில் ஒன்று தேங்காய் வைத்து பார்க்கும் முறையாகும். டாடா சோசியல் சயின்ஸ் அமைப்பு உலர் தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் உத்தியினை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கும் முறை

அதாவது ஒரு தேங்காவை எடுத்து உறித்து (குடுமி மட்டும் உள்ளவாறு) மெதுவாக “எல்” (ட) வடிவில் உங்கள் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அப்போது எங்கு பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காவை கொண்டு சென்றால் தேங்காயின் குருமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும். இப்படி 90 டிகிரியில் தேங்காயின் குருமி இருந்தால் அங்குதான் தண்ணீர் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

என்ன! இனி நீங்கள் எங்கும்அலையாமல் நீங்களே நீர் வழித்தடத்தை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button