மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும்… தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…

பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரெஸ்ட் பம்ப் பற்றித் தெரிந்திருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை எப்படி சேகரிக்கலாம்? எவ்வளவு நாள் பாதுகாக்கலாம்? எதை செய்யலாம்? எதை தவிர்க்கலாம் என அனைத்தையும் இந்தப் பதிவில் பார்க்கலாம். அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலை சேமித்து வைப்போருக்கும் இப்பதிவு உதவும்…

தாய்ப்பாலை குழந்தைக்கு தாய் கொடுப்பது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயம். அன்பு, அரவணைப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்புணர்வு போன்ற அனைத்து நல்ல விஷயங்களையும் தரும். இதையே அனைத்துத் தாய்மார்களும் எல்லாக் காலத்திலும் செய்ய முடியாமல் போகலாம். ஏனெனில் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு, தாய்ப்பாலை குழந்தைக்கு நேரடியாக வழங்க முடியாமல் போகலாம். அவர்களுக்கு என்ன மாற்று வழி? பார்க்கலாம் வாங்க…

பிரெஸ்ட் பம்ப்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.

மார்பகத்தை அழுத்தி அழுத்தி தாய்ப்பாலை எடுத்து மேனுவல் பிரெஸ்ட் பம்ப். அதாவது நாம் அழுத்தி தாய்ப்பால் எடுக்க வேண்டும். இது ஒரு வகை.

எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப், இன்னொரு வகை. இதை மார்பகத்தில் வைத்துப் பொருத்தி கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஸ்விட்ச் போர்ட்டில், பிளக்கை சொருகி ஆன் செய்து கொள்ளலாம். இந்தக் கருவியே மார்பகத்தை அழுத்தி பாலை சேகரித்து கொள்ளும். இது தானியங்கி கருவி.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்த இரண்டு கருவிகளில், தாய்மார்கள் தங்களது வசதி பொறுத்து வாங்கிப் பயன்படுத்தலாம்.

ஏன் பிரெஸ்ட் பம்ப் தேவை?

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும்.

தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.

சில குழந்தைகள் இரவில் அழுது கொண்டே இருக்கும். தூக்கமும் வரும் அதேசமயம் பசியும் இருக்கும். சரியாக தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குறைந்த இடைவெளியில் அழுதுகொண்டே இருப்பார்கள். நீங்கள் தாய்ப்பாலை சேகரித்து வைத்துக் கொண்டால், இரவில் சேமித்து வைத்த பாலை கொடுத்து விடலாம். தாய் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் தந்தையோ மற்றவர்களோ எழுந்து சேமித்து வைத்த பாலை கொடுக்கலாம்.

Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button