ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்…

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை. இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சுமார் 10 ஆயிரம் டன்கள் புழக்கக்கத்திற்கு பிறகு சேகரிக்கப்படுவதில்லை. குப்பை கழிவுகளாக மாறுகின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் ஆய்வின்படி, ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் சுமார் 20 கிலோ கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்கிறான். அதற்கேற்ப பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், ஜாடிகள், கொள்கலன்கள், பாத்திரங்கள் என சமையலறையை பிளாஸ்டிக் தான் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் அழகிய டிசைன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை விரும்பி பயன்படுத்தவும் செய்கிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகுவது நல்லதல்ல என்பதை பலரும் ஒப்புக்கொண்டாலும் அதனை அறவே தவிர்க்க முன் வருவதில்லை.

தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் மீது நேரடியாக சூரிய ஒளி படும்போது ஏற்படும் வெப்பம் காரணமாக டையாக்ஸின் என்ற நச்சுப்பொருள் வெளிப்படும். அது தண்ணீரில் கலந்துவிடும். அந்த நீரை உட்கொள்ளும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பீபெனைல் ஏ என்பது ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் ஒரு ரசாயனமாகும். இது பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும். நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினை, முன்கூட்டியே பருவமடைதல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை சேமித்து வைத்து குடிக்காமல் இருப்பது நல்லது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படும். பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் தண்ணீர் மூலம் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைத்து விடும்.

பிளாஸ்டிக்கில் பித்தலேட்ஸ் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது கலக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகி வந்தால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாட்டில் தண்ணீரில், அதிகப்படியான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

மைக்ரோபிளாஸ்டிக் என்பது 5 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் நுண்துகளாகும். இந்த மைக்ரோபிளாஸ்டிக் 93 சதவீதம் பாட்டில் தண்ணீரில் காணப்படுகிறது. இந்த மைக்ரோபிளாஸ்டிக் நுகர்வு ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உலக சுகாதார நிறுவனம் கூறினாலும், அது கவலை தரும் விஷயமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button