ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் வேஸ்ட் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

உங்கள் சருமம் மற்றும் கூந்தலின் தன்மைக்கு தகுந்த மாதிரி எப்படி பியூட்டி பொருட்களை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் பற்களின் தன்மையை பொருத்தே டூத் பேஸ்ட்யையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிறைய வகையான டூத் பேஸ்ட்கள் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிலும் அதற்கு தகுந்த மாதிரி அதில் சேர்க்கப்படும் பொருட்கள் மட்டும் வேறுபடுகின்றன. பற்கள் பராமரிப்பு, ஈறு நோய், பற்களில் ஏற்படும் கூச்சம் இவற்றை எதிர்த்து போராடக் கூடிய பொருட்கள் இவற்றில் அடங்கியுள்ளன. இதைத் தவிர பற்களை சுத்தப்படுத்த, பற்களை வெண்மையாக்க மற்றும் சுவாச புத்துணர்ச்சி போன்றவற்றையும் கொடுக்கின்ற டூத் பேஸ்ட்கள் தற்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றனர் 1, 2.

உங்கள் பற்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 விதமான அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் சாதாரண டூத் பேஸ்ட்லிருந்து தகுந்த சிறப்பான டூத் பேஸ்ட்க்கு மாற்றம் பெறுங்கள் :

பற்களில் தகடுகள் தென்பட்டால்

உங்கள் பற்களில் காணப்படும் பாக்டீரியா நீங்கள் என்ன தான் பல் துலக்கினாலும் சரி வாய் கொப்பளித்தாலும் சரி பற்களை விட்டு நீங்காது. அது அப்படியே பல்கி பெருகி பெரிய காலனியையே உருவாக்கி விடுவதற்கு பெயர் தான் தகடுகள். பற்களில் பிசின் மாதிரி ஒட்டி கொண்டு இருக்கும் இந்த தகடுகள் பற்களை இரண்டு விதமாக பாதிக்கிறது. நாம் சாப்பிடும் போது வாயினுள் போகும் உணவுகள் மற்றும் சர்க்கரை போன்றவை இதில் ஒட்டிக் கொள்கிறது. இந்த தகடுகள் ஒட்டிக் கொண்ட இந்த உணவுகளையே சாப்பிட்டு சாப்பிட்டு அதன் பாக்டீரியா கூட்டத்தை பெருக்கி இறுதியில் ஒரு அமிலத்தை உருவாக்குகிறது. இப்பொழுது இந்த தகடுகள் உருவான அமிலத் தன்மையை கொண்டு நமது பற்களில் நன்றாக ஒட்டிக் கொள்கிறது. இந்த அமிலத் தன்மையை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. அது அப்படியே தங்கி நமது பற்களின் எனாமலை அரித்து பற்சொத்தையை உண்டு பண்ணுகிறது. எனவே இந்த மாதிரியான பிரச்சினைக்கு தகடுகளை தாக்கி அழிக்கக் கூடிய பற்பசையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே பாக்டீரியாவை அழித்து நமக்கு பற்சொத்தை இல்லாமல் இருக்க உதவும் 3.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பற்களின் சென்ஸ்டிவ்விட்டி

நீங்கள் சூடான அல்லது குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்களை பருகும் போதோ, பல் துலக்கும் போதோ அல்லது கொப்பளிக்கும் போதோ அல்லது குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் போதோ தீடீரென்று சிறிய சுரீர் என்ற வலி உண்டானால் உங்களுக்கு பல் கூச்சம் இருக்கிறது என்று அர்த்தம். பற்களில் ஏற்படும் கூச்சமானது தானாக சரியாகாது. எனவே இதற்கு தகுந்த டூத் பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டும். கூச்சத்தை தடுக்கும் டூத் பேஸ்ட் மட்டுமே இவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஏனெனில் இந்த டூத் பேஸ்ட் கூச்சத்தை உண்டாக்கும் பல் நரம்புகளை தடுத்து அதிலிருந்து நிவாரணம் அளிக்கிறது 3.

பற்கறைகள்

நாம் குழந்தையாக இருக்கும் போது இருந்த பற்களின் வெண்மை நிறம் போகக் போக மழுங்க ஆரம்பித்து விடும். இதற்கு காரணம் நாம் பருகும் காபி, தேநீர் மற்றும் புகையிலை பழக்கம் அல்லது சில மருந்துகள் போன்றவை பற்களின் வெண்மை நிறத்தை மாற்றி விடுகின்றன. இருப்பினும் பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதே எல்லாருடைய ஆசையாகவும் இருக்கிறது. அப்படி உங்களுக்கு உதவும் வகையில் தான் தற்போது மார்க்கெட்டில் நிறைய பற்களை வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்கள் நம் தினசரி பயன்பாட்டிற்கே கிடைக்கின்றன 4. இந்த வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்கள் பற்களில் உள்ள கறைகளை ஸ்க்ரப் மாதிரி உராய்ப்பதன் மூலம் நீக்குகிறது 5.

வாய் துர்நாற்றம்

நீங்கள் தினமும் பற்களை துலக்கும் பழக்கம் இல்லாவிட்டால் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள உணவுகளால் உங்கள் பற்கள், ஈறுகள் மற்றும் நாக்குகள் போன்றவற்றில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல்மடங்கு பெருக ஆரம்பித்து விடும். இதன் விளைவால் வாய் துர்நாற்றம் ஏற்படும் 6. எனவே இந்த வாய் துர்நாற்றத்திற்கு தகுந்த சிறப்பான டூத் பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டும். நல்ல புத்துணர்வான நறுமணம் மிக்க டூத் பேஸ்ட்கள் இந்த கெட்ட துர்நாற்றத்தை போக்கிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button