ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் தற்கொலை உணர்வை தூண்டும் இந்த விஷயத்தை சாதாரணமா எடுத்துக்காதீங்க!

இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் யாருக்கு தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது? இதில் குழந்தைகள் மட்டும் என்ன விதி விலக்கா? இன்றைய குழந்தைகள் பலரும் மன பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் மார்டன் டெக்னாலஜிகள், பெற்றோர்களின் அழுத்தம், பள்ளியில் கல்வி சுமை, போட்டிகள் போன்றவை குழந்தைகளின் மனநிலையை மாற்றுவதாக உள்ளது.

ஆனால் இப்போது எல்லாம், பெரியவர்களால் கூட தனக்கு என்ன தான் பிரச்சனை உள்ளது என்று வெளிப்படையாக கூறிவிட முடிவதில்லை. இப்படி இருக்கும் போது ஒன்றும் அறியா குழந்தைகள் எப்படி தான் தனக்கு உள்ள பிரச்சனைகளை வெளிக்காட்டும்.. பெற்றோர்களாகிய நீங்கள் தான் உங்களது குழந்தைக்கு என்ன மனகஷ்டம் உள்ளது என்பதை கவனித்து, அவர்களுக்கு தெளிவான, ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்கித் தரவேண்டும். இது உங்களது கடமையாகும்.

இது அரிதானது!

குழந்தைகளின் மனநிலையை எளிதாக புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது ஒன்று எளிதான விஷயம் கிடையாது. இது ஏன் என்றால் குழந்தைகளால் தங்களது மனசுமையை அல்லது தனக்கு இருக்கும் கஷ்டத்தை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாது. அவர்கள் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் வெளிப்படுத்தமாட்டார்கள்.

கவனிக்காவிட்டால்?

நம்மில் பலருக்கு நமது சிறுவயதில் நடந்த பிரச்சனைகள், அனுபவித்த கஷ்டங்கள் சில இன்று வரையில் மனதை பாதித்துக் கொண்டு தான் இருக்கும். ஒரு சிலரது வாழ்க்கையையே புரட்டி போட்ட விஷயங்கள் அவர்கள் சிறு வயதில் அனுபவித்த சில கசப்பான நிகழ்வுகளாக தான் இருக்கும்.

இது போன்ற ஒரு நிலை நமது பிள்ளைகளுக்கு வர வேண்டும் என்று யாரும் நினைக்கமாட்டார்கள்.. உங்களது குழந்தையின் மனநிலையில் உண்டாகும் மாற்றங்கள் போன்றவற்றை அவ்வப்போது அறிந்து அதற்கு ஒரு தீர்வாக இருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும். இவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் மனநோய்க்கு ஆளாவார்கள்.. இந்த வயதில் வரும் சின்ன பிரச்சனைகள் கூட வருங்காலத்தில் அவர்களது வருங்காலத்தில் தாக்கத்தை உண்டாக்கும்.

மனநிலையில் மாற்றம்

எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் திடீரென சோர்வாக இருக்கலாம். பேசிக் கொண்டே இருக்கும் குழந்தைகள் அமைதியாக மாறிவிடலாம். சோகமாக இருக்கலாம். இப்படியான மாற்றத்தை நீங்கள் உங்களது துறுத்துறுவென இருக்கும் குழந்தைகளிடம் கண்டால் இது மன அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம்.

எதிர்மறை உணர்வுகள்

குழந்தைகளுக்கு எதிர்மறை உணர்வுகள் அதிகரித்தால் அவர்கள் தங்களது படிப்பில் உள்ள கவத்தை இழப்பார்கள், மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உடலில் வெளிப்படும் மாற்றங்கள்

குழந்தைகளுக்கு சில மாற்றங்கள் உடல்நிலை ரீதியாகவும் வெளிப்படும். உதாரணமாக அவர்களுக்கு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அவர்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களது உடல் எடை குறையும். அதுமட்டுமில்லாமல் வேறு சில உபாதைகளும் அவர்களுக்கு வரும், அவை, வயிற்றுவலி, தலைவலி போன்ற பிரச்சனைகளாகவும் இருக்கலாம்.

கவனமின்மை

குழந்தைகளின் மனநிலைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அவர்களது படிப்பில் உள்ள கவனம் குறையும். இதனால் குறைந்த மதிப்பெண்களை பெறுவார்கள். மதிப்பெண் ஏன் குறைவாக எடுத்தாய் என்று திட்டுவதை விட, அவர்கள் மதிப்பெண் எடுக்க தடையாக இருந்தது எது என்று அறிந்து அந்த பிரச்சனையை குறைக்க வேண்டியது அவசியமாகும்.

மருத்துவரை நாடவும்

உங்களது குழந்தைகள் தங்களுக்கு இருக்கும் மனக்குறையின் காரணமாக தங்களை தாங்களே தண்டித்துக் கொள்வது, தனது உடலில் காயம் உண்டாக்கி கொள்வது போன்ற பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரிடம் அவர்களை அழைத்து சென்று தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் மன பிரச்சனைகள், மன இறுக்கம் போன்றவைகள் தற்கொலை எண்ணங்களை கூட தூண்டலாம்.

ஆசிரியர்

உங்களது குழந்தைகள் உங்களை விட அதிக நேரம் அவர்களுடைய ஆசிரியருடன் தான் இருக்கிறார்கள். அவர்களுடன் பெற்றோர்கள் நல்ல நட்பை வளர்ந்து கொண்டு, உங்களது குழந்தையின் மனநிலை பள்ளியில் எப்படி உள்ளது என்பதை அவ்வப்போது கேட்டறியலாம். அதோடு குழந்தையின் மனநிலையை சரி செய்ய ஒரு ஆசிரியரால் எளிமையாக முடியும். எனவே அவரது உதவி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

சுற்றுலா

அடிக்கடி உங்களது குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லுங்கள்.. நீங்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது மிகவும் நேர்மையான முறையில் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, 5 வயது குழந்தையை 3 மூன்று வயது தான் ஆகிறது என்று கூறி பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் செல்வது போன்றவை, நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்ற மனநிலையை கொண்டுவரும். அதோடு அவர்களும் ஏமாற்றவும், பொய் சொல்லவும் பழகிக் கொள்வார்கள்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button