25.9 C
Chennai
Friday, Dec 13, 2024
17 1450328882 7 oatmeal2
கை பராமரிப்பு

கைகளில் உள்ள வறட்சியைப் போக்க சில அற்புத வழிகள்!!!

குளிர்காலம் அனைவருக்கும் மிகவும் பிடித்த காலமாக இருந்தாலும், இக்காலத்தில் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு மிகவும் குளிர்ச்சியான காற்று தான் காரணம். அதில் முதன்மையான ஓர் பிரச்சனை சரும வறட்சி. நம் உடலிலேயே எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது நம் கைகள் தான். இதனால் குளிர்காலத்தில் கைகளில் அதிகப்படியான குளிர்ச்சியான காற்று பட்டு, அதனால் கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும்.

இதனைத் தடுக்க வேண்டுமானால், குளிர்காலத்தில் கைகளுக்கு போதிய பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம். அதுவும் க்ரீம்களைக் கொண்டு அதிக பராமரிப்புக்களை மேற்கொள்வதற்கு பதிலாக, ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், கைகளில் உள்ள வறட்சி நீங்கி, கைகளும் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

இங்கு கைகளில் உள்ள வறட்சியைப் போக்க சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து குளிர்காலத்தில் பின்பற்றி கைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயில்

குளிர்காலத்தில் ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும். எனவே மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள்.

தேன்

தேன் சருமத்திற்கு ஈரப்பசையை வழங்குவதோடு, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும். அதற்கு தேனை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, அதோடு சிறிது சர்க்கரை கலந்து சருமத்தை ஸ்கரப் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமத்தின் ஈரப்பசை அதிகரித்து, சருமமும் பொலிவோடு இருக்கும்.

தயிர்

தயிரும் சிறந்த மாய்ஸ்சுரைசர். மேலும் இதில் ப்ளீச்சிங் தன்மையும் உள்ளது. எனவே குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

தேங்காய் எண்ணெய்

கண்ட க்ரீம் மாய்ஸ்சுரைசர்களை கை, கால்களுக்கு தேய்ப்பதற்கு பதிலாக, தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.

பால்

முகத்தை எப்படி பால் கொண்டு துடைத்து எடுக்கிறீர்களோ, அதேப் போல் தினமும் பாலை கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தால், கைகளுக்கு ஈரப்பசை கிடைத்தவாறும் இருக்கும், கைகளில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் பொடி செய்து, பால் சேர்த்து கலந்து, அதனை கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கைகளில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதோடு, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

17 1450328882 7 oatmeal2

Related posts

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க

nathan

அக்குளில் உள்ள கருமையை நீக்கி அழகாக பராமரிப்பது எப்படி?

nathan

உங்க அக்குள் ஏன் கருப்பாக உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

கை, கால் சிகிச்சைகளும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும்

nathan

உங்களுக்கு தெரியுமா அக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

அக்குளில் உள்ள கருமையைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் குறித்து காண்போம்…..

sangika

உரோமத்தை நீக்கும் முறைகள்!..

sangika